ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. 9வது நாளான இன்று, பெண்களுக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரை இறுதி போட்டி நடைப்பெற்றது.
இந்தியாவின் சாய்னா நெஹ்வால், சீன தைபேயின் டாய் சுயிங் ஆகியோர் மோதினர். போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் சாய்னா போராடினார். எனினும், போட்டி முடிவில் 17-21, 14-21 என்ற செட் கணக்கில் டாய் சுயிங் வெற்றி பெற்றார்.
இதன் மூலம், இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த சாய்னா, வெண்கலப் பதக்கம் வென்றார். மற்றொரு அரை இறுதி போட்டியில், இந்தியாவின் பி.வி சிந்து - ஜப்பானில் அகானே யமாகுச்சி மோதுகின்றனர்.