Read in English
This Article is From May 30, 2019

கொடுமை செய்த கணவனின் தலையைத் துண்டித்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற பெண்

“பல ஆண்டுகளாக அவர் என்னை அடித்து நொறுக்கியுள்ளார். பல நேரங்களில் கோடாரியால் என்னை காயப்படுத்தினார். அவரை விட்டு விலகி விட வேண்டும் என்று பல ஆண்டுகளாக நினைத்தேன். பிள்ளைகள் இருந்ததால் அவ்வாறு செய்யமுடியவில்லை. ஒரு கட்டத்தில் தாங்கமுடியாத அளவிற்கு போய் விட்டது. நான் அவரை கொல்லவில்லை என்றால் அவர் என்னை கொன்றிருப்பார்” என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

5 பிள்ளைகளில் 3 மகள்கள், 2மகன்கள் உள்ளனர். 

Lakhimpur :

அசாமின் லக்கிம்பூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக உடல் மற்றும் மன சித்திரவதைக்கு ஆளான பெண்ணொருவர் கணவனை கொலை செய்து விட்டு தலையை துண்டித்து உள்ளூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

செவ்வாய் கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. மஜாகோன் என்ற கிராமத்திலிருந்து பெண்ணொருவர் தல்பூர் அவுட் போஸ்டில் கணவரின் தலையை துண்டித்து பிளாஸ்டிக்கூடையில் எடுத்து சென்றுள்ளார்.  குற்றம் சட்டப்பட்ட பெண் 48 வயதான  குனேஸ்வரி பர்காடா 55 வயதான கணவனை தான் கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். 

“பல ஆண்டுகளாக அவர் என்னை அடித்து நொறுக்கியுள்ளார். பல நேரங்களில் கோடாரியால் என்னை காயப்படுத்தினார். அவரை விட்டு விலகி விட வேண்டும் என்று பல ஆண்டுகளாக நினைத்தேன். பிள்ளைகள் இருந்ததால் அவ்வாறு செய்யமுடியவில்லை. ஒரு கட்டத்தில் தாங்கமுடியாத அளவிற்கு போய் விட்டது. நான் அவரை கொல்லவில்லை என்றால் அவர் என்னை கொன்றிருப்பார்” என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.

5 பிள்ளைகளில் 3 மகள்கள், 2மகன்கள் உள்ளனர். 

Advertisement

 தனது கணவரை கொலைசெய்து தலையைத் துண்டித்து 5 கி.மீ தொலைவில் உள்ள காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement