Read in English
This Article is From Jul 24, 2019

அசாம் வெள்ளத்தில் அரியவகை காண்டா மிருகம் உள்பட 200 விலங்குகள் உயிரிப்பு!!

நாட்டின் மிகச்சிறந்த உயிரியல் பூங்காக்களில் ஒன்றாக கருதப்படும் அசாம் கஜிரங்கா உயிரியல் பூங்கா வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்கள் உயரமான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

Guwahati:

அசாம் வெள்ளத்தில் அரிய வகை காண்டா மிருகம் உள்பட 200 விலங்குகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிகச்சிறந்த உயிரியல் பூங்காக்களில் ஒன்றாக கருதப்படும் அசாம் கஜிரங்கா உயிரியல் பூங்கா வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இங்கு மொத்தம் 40 சதவீத இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளன. 10 நாட்களாக விடாமல் பெய்த மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. இதில் 71 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 

வெள்ளம் காரணமாக சில அபாய விலங்குகள் மக்கள் வாழும் இடங்களுக்குள் புகுந்துள்ளன.  இதுகுறித்து பூங்காவின் இயக்குனர் பி. சிவக்குமார் கூறுகையில், 17 காண்டா மிருகங்கள், யானை 112 மான்கள், 12 சாம்பார் வகை மான்கள் உள்படி 205 விலங்குகள் உயிரிழந்துள்ளன. வெள்ளத்தை சாதகமாக பயன்படுத்தி உயிரினங்கள் வேட்டையாடுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 

Advertisement

இதற்காக வனக்காவலர்களுக்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகிறது என்றார். 

வெள்ளத்தில் சிக்கித் தவித்த காண்டா மிருகம், யானை உள்ளிட்ட 69 விலங்குகள் தன்னார்வலர்கள் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன. அசாம் வெள்ளத்தில் 4 ஆயிரம் கிராமங்கள் பாதிப்படைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement