This Article is From Jul 31, 2018

அசாம் குடிமக்கள் பட்டியல் அடிப்படையில் எந்நடவடிக்கையும் எடுக்கப்படாது: உச்சநீதிமன்றம்

அசாமின் குடிமக்கள் பட்டியல் வரைவில் 40 இலட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டங்களைக் கிளப்பியுள்ளது

அசாம் குடிமக்கள் பட்டியல் அடிப்படையில் எந்நடவடிக்கையும் எடுக்கப்படாது: உச்சநீதிமன்றம்
New Delhi:

“தற்போது வெளியாகவுள்ள அசாம் குடியுரிமைப் பட்டியல் வெறும் வரைவுதான். இதன் அடிப்படியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. இது குறித்த அனைத்து ஆட்சேபணைகளும் குறைகளும் நியாயமான முறையில் தீர்த்துவைக்கப்படும்” என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. மேலும், இச்சிக்கலைக் களைய அரசாங்கம் மேற்கொள்ள உள்ள நடைமுறைகளைச் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தற்போது வெளியாகவுள்ள அசாமின் குடிமக்கள் பட்டியல் வரைவில் 40 இலட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கடும் போராட்டங்களைக் கிளப்பியுள்ளது. அசாம் மக்கள் இதுகுறித்து அச்சம் கொண்டுள்ளனர். சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்களை வெளியேற்றும் போர்வையில் முஸ்லீம் மக்களை இலக்காக்கித் தாக்குதல் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் அரசை விமர்சித்துள்ளன.

இவ்வரைவு ஆகஸ்ட் 7 அன்று பொதுமக்கள் பார்வைக்கு வெளியாகிறது. இதில் தங்கள் பெயர் விடுபட்டவர்கள் ஆகஸ்ட் 30இல் இருந்து செப்டம்பர் 28க்குள் தங்கள் ஆட்சேபணைகளையும் கருத்துக்களையும் பதியலாம் என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

.