This Article is From Aug 01, 2018

பங்களாதேஷ் அகதிகளை சுட்டுத் தள்ள வேண்டும் - பா.ஜ.க எம்.எல்.ஏ வன்மம்

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு கணக்கு எடுக்கப்பட்டு, வரைவு படியல் ஒன்று உருவாக்கப்பட்டது

NEW DELHI:

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு கணக்கு எடுக்கப்பட்டு, வரைவு படியல் ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் 40 லட்சம் பேரின் பெயர் இல்லாதது பிரச்சனையை கிளப்பியுள்ளது. பட்டியலில் இடம் பெறாதவர்கள், சொந்த நாட்டிலேயே அகதிகள் என முத்திரைக் குத்தப்படுவார்களோ என்ற பதற்றம் அசாம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அசாமில் இருந்து பங்களாதேஷைச் சேர்ந்தவர்களை வெளியேற்றும் முயற்சியாக இந்த கணக்கெடுப்பு நடந்திருக்கிறது.

இந்த பிரச்சனை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் போதே, பா.ஜ.க எம்.எல்.ஏ டி.ராஜா சிங் என்பவரது கருத்து மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பங்களாதேஷ் மற்றும் ரொஹிங்கியா முஸ்லிம் அகதிகள் மிகவும் மோசமானவர்கள். அவர்கள் நாட்டை விட்டு போகவில்லை என்றால், சுட்டுத் தள்ள வேண்டும் என்று ஐதிராபாத்தைச் சேர்ந்த அவர் கூறியுள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எப்படி இந்தியாவில் இருக்கலாம். அவர்களை மத்திய அரசு விரட்டியடிக்க வேண்டும். இல்லையென்றால், மற்ற நாடுகளில் அத்துமீறி நுழைபவர்களை சுடுவதுபோல சுட வேண்டும். பங்களாதேஷைச் சேர்ந்தவர்களோ அல்லது ரொஹிங்கியா முஸ்லிம்களோ, அமைதியான முறையில் அவர்கள் வெளியேறவில்லை, என்றால் சுடத்தான் வேண்டும்” என வன்மத்தைக் கக்கியுள்ளார்.

ஐதராபாத்தின், கோஷாமஹால் பகுதி எம்.எல்.ஏ ஆன ராஜா சிங், இது போன்று பல வன்மக் கருத்துக்களை தொடர்ந்து பேசி வருவதை வழக்கமாக வைத்திருப்பவர். முன்னதாக, ஐதிராபாத் ஒரு மினி பாகிஸ்தான், என அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

.