This Article is From Oct 21, 2018

தலைமை நீதிபதிக்கு பாதுகாப்பு குறைவு! - மூத்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்!

மூத்த போலீஸ் அதிகாரி பன்வார் லால் மீனா, அனைத்து இந்திய சேவை விதி 1969, படி பிரிவு3(1) கீழ் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உள்துறை அமைச்சகத்தால், ஆளுநரின் பெயரில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது

தலைமை நீதிபதிக்கு பாதுகாப்பு குறைவு! - மூத்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்!

தலைமை நீதிபதி ரன்ஜன் கோகாய் மற்றும் அவரது மனைவியும் கடந்த அக்.17ஆம் தேதி கவுகாத்தி சென்றிருந்தனர்.

Guwahati:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரன்ஜன் கோகாயின் காமாக்யா கோவில் வருகையின் போது, அவருக்கு போதுமான பாதுகாப்பு உறுதிகளை ஏற்படுத்தி தராத காரணத்திற்காக கவுகாத்தி மேற்கு துணை ஆணையர் அசாம் அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

துணை ஆணையர் பன்வார் லால் மீனா, அனைத்து இந்திய சேவை விதி 1969, படி பிரிவு3(1) கீழ் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உள்துறை அமைச்சகத்தால், ஆளுநரின் பெயரில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

உள்துறை செயலாளர் தீபக் மஜூம்தார், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், அந்த உத்தரவில், இந்த சஸ்பெண்ட் காலகட்டத்தில் பன்வார் லால் மீனா, அசாம் தலைமை காவல் நிலையத்தில் இருக்க வேண்டும் என்றும், உரிய அதிகாரிகளிடம் அனுமதி வாங்காமல் அவர் எங்கும் செல்லக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.