New Delhi: அசாம் மாநிலத்தில் இன்று இறுதி குடியுரிமை இறுதி வரைவு வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, சுமார் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லாத நிலைமை உருவாகியுள்ளது. அவர்கள் தகுந்த ஆவணங்கள் சமர்பிக்கவில்லை என்றால், மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவர் என்று தெரிகிறது. அஸ்ஸாமில் 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் தேசிய குடிமக்கள் பதிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்க தேசத்திலிருந்து வந்து தங்கியுள்ள முஸ்லிம் அகதிகளை குறிவைக்கும் நோக்கில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகறிது.
முதல் குடியுரிமை வெளியிடப்பட்டு 7 மாதங்கள் கழித்து இந்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது. 1.9 கோடி பேரின் பெயர் முதல் வரைவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இரண்டாவது வரைவின் அடிப்படையில் யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர்களின் கருத்து கேட்டறியப்படும் என்று அரசு தரப்பு அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இரண்டாவது வரைவு வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாநில முதல்வர் சர்பானந்த் சோனாவால், ‘முதல் வரைவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வெளயிடப்பட்டது. அப்போது அமைதியான சூழல் நிலவியது. இறுதிப் பட்டியலின் போதும் அதைப் போன்ற சூழலை காக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொள்கிறேன்’ என்று கோரிக்கை வைத்துள்ளார்.
சட்ட ஒழுங்கை பாதுகாக்க மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகபடுத்தப்பட்டுள்ளன.
லைவ் அப்டேட்ஸ்:
மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜூ, ‘அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும்’ என்றுள்ளார்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘இப்போது வெளியிடப்பட்டுள்ளது வெறும் இறுதி வரைவுதான். இது இறுதிப் பட்டியல் இல்லை. எனவே, மக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். சிலர் சரியான ஆவணங்களை சமர்பிக்காததால் அவர்களின் பெயர் விடுபட்டுப் போயிருக்கும். எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும்’ என்று உறுதி அளித்துள்ளார்.
‘தேசிய குடிமக்கள் பதிவுக்காக கடந்த 2015 ஆம் ஆண்டு, அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து 6.5 கோடி மக்கள் விண்ணப்பத்திருந்தனர். 68.27 குடும்பங்கள் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்திருந்தனர்’ என்று இந்திய ஜெனரல் பதிவாளர் சைலேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
‘முதல் வரைவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வெளயிடப்பட்டது. அப்போது அமைதியான சூழல் நிலவியது. இறுதிப் பட்டியலின் போதும் அதைப் போன்ற சூழலை காக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொள்கிறேன்’ என்று கோரிக்கை வைத்துள்ளார் மாநில முதல்வர் சர்பானந்த் சோனாவால்.
குடியுரிமை கொடுக்கப்படாத 40 லட்சம் பேர், வரைவில் சேர்க்கப்படுவர் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
வங்க தேச அகதிகளையும், முஸ்லீம் சமூகத்தினரையும் குறிவைக்கும் நோக்கில் தான் இந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
யாரையும் இறுதி வரைவின் அடிப்படையில் வெளியேற்ற மாட்டோம் என்று அரசு தரப்பு கூறியுள்ளது.