This Article is From Dec 22, 2018

அசாமில் விவசாயிகள் திட்டத்திற்காக ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் விவசாயிகளின் கடனை ரத்து செய்து வரும் நிலையில், அசாம் பாஜக அரசு திட்டத்திற்காக நிதி ஒதுக்கியுள்ளது.

அசாமில் விவசாயிகள் திட்டத்திற்காக ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு

விவசாயிகள் நலனுக்காக 3 திட்டங்களை அசாம் பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது.

Guwahati:

அசாமில் விவசாயிகள் திட்டத்திற்காக ரூ.1,000 கோடியை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளது. புதிதாக ஆட்சியைப் பிடித்த மாநிலங்களில் காங்கிரஸ் அரசு  விவசாய கடன்களை ரத்து செய்து வரும் நிலையில் அசாம் பாஜக அரசு  இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

அசாமில் விவசாயிகள் நலனுக்காக 3 திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அம்மாநில நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், '' மாநிலத்தில் 27 லட்சம் விவசாய குடும்பத்தினர் 26 ஆயிரம் கிராமங்களில் வசித்து வருகின்றனர்.

அவர்கள் அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் கடன் வசதி பெறும் வகையில் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம்'' என்றார். இதேபோன்று 2 திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதிதாக ஆட்சியை பிடித்த சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் அரசு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தது. இந்த நிலையில் அசாமை ஆளும் பாஜக அரசு புதிய விவசாய திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

.