Read in English
This Article is From Oct 25, 2019

23 ஆண்டுகளாக காங்கிரஸ் வசமிருந்த எம்.எல்.ஏ. தொகுதியை பறித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!!

கேரளாவின் கொன்னி தொகுதி கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் வசம் இருந்து வந்தது. இதன் எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் அமைச்சர் அடூர் பிரகாஷ், அட்டிங்கால் மக்களவை தொகுதிக்கு போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement
இந்தியா Edited by

கொன்னி தொகுதிக்கு கடந்த 21-ம்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

Thiruvananthapuram:

கேரளாவில் கொன்னி சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

கேரளாவின் கொன்னி தொகுதி கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் வசம் இருந்து வந்தது. இதன் எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் அமைச்சர் அடூர் பிரகாஷ், அட்டிங்கால் மக்களவை தொகுதிக்கு போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். 

இதையடுத்து காலியான கொன்னி தொகுதிக்கு கடந்த 21-ம்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் மோகன் ராஜ், பாஜக வேட்பாளர் கே. சுரேந்திரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.யு. ஜெனிஷ் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது.

Advertisement

இன்று முடிவுகள் வெளியான நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் மோகன் ராஜை விட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜெனிஷ் 9 ஆயிரத்து 953 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி பெற்றார். 

23 ஆண்டுகளுக்கு பிறகு கொன்னி தொகுதியை இழந்திருக்கிறது காங்கிரஸ். 

Advertisement

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement