பாஜக ஆட்சி புரிந்த ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
New Delhi: டிசம்பர் 7 சட்டசபை தேர்தல்களுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. இதில் பாஜக ஆட்சி புரிந்த ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் மில்லியன் கணக்கில் வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸும் பாஜகவும் வெற்றிபெற கடுமையாக போராடி வருகின்றன.
தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி(டிஆர்எஸ்) கட்சியின் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் முன்னிலை வகித்து வருகிறார். டிஆர் எஸ் 28 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 15 தொகுதிகளில் காங்கிரஸ்க்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். பாஜக கடந்த 15 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தை ஆண்டு வருகிறது. சத்தீஸ்கரில் இரு கட்சிகளும் 9 இடங்களில் முன்னணியில் உள்ளனர்.
ராஜஸ்தானில் 34 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சமீப காலங்களில் ராஜஸ்தானில் நடந்த தேர்தல்களில் ஆளும் கட்சியான பாஜகவை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. பாஜகவை 25 தொகுதிகளில் வெற்றி பெறலாம் எனத் தெரிகிறது.
ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தலை அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 7 அன்று ராஜஸ்தானில் 199 தொகுதிகளில் 15,687 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இங்கு 74.21 சதவீத வாக்குகள் பதிவாகின. ராஜஸ்தானில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகிய இருகட்சிகள் மட்டுமே பிரதானமாக இருந்து வருகின்றன.
தெலுங்கானா முதல் முறையாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 73.20 சதவீத வாக்குகள் பதிவாகின. மத்திய பிரதேசத்தில் நவம்பர் 28 அன்று தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தின் 5.03 கோடி வாக்களர்களில் 75 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. மத்திய பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டிற்கும் கடும் போட்டி நிலவும் என எக்ஸிட் போல் கருத்து கணிப்புகள் தெரிவித்தன.