Read in English
This Article is From Aug 03, 2018

கேரள நடிகை கடத்தப்பட்ட வழக்கு: பெண் நீதிபதி விசாரிக்க 'அம்மா' கோரிக்கை

அம்மா’வில் நிர்வாகிகளாக உள்ள நடிகைகள் ஹனிரோஸ், ரசனா நாராயண்குட்டி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது

Advertisement
தெற்கு

நடிகை கடத்தப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் திலீப் கடந்த மாதம் சங்கத்தில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

Kochi:

நடிகர் மோகன்லால் தலைவராக உள்ள மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான அம்மா, “நடிகையைக் கடத்தியதாக கதாநாயகன் திலீப் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கை பெண் நீதிபதி விசாரிக்க வேண்டும்” என கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அம்மா’வில் நிர்வாகிகளாக உள்ள நடிகைகள் ஹனிரோஸ், ரசனா நாராயண்குட்டி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

இவ்வழக்கில் மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான ‘அம்மா’ (AMMA) செயல்படும் விதத்தால் அதிருப்தி அடைந்த அண்மையில் தொடங்கப்பட்ட ‘திரைத்துறையிலுள்ள பெண்கள் கூட்டமைப்பு’ (WCC) கடுமையாக விமர்சித்ததை அடுத்து அம்மா இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.

Advertisement

முன்னதாக, கடந்த மாதம் அம்மா தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மோகன்லால், நடிகை கடத்தப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் திலீப்பை சங்கத்தில் மீண்டும் சேர்த்துக்கொண்டார்.

இதனையடுத்து கடத்தப்பட்ட நடிகை உள்ளிட்ட நான்கு முன்னணி நடிகைகள் சங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவுக்கும் விதமாக அம்மா’வில் இருந்து விலகினர். மேலும் 14 நடிகைகளும் சங்கத்திலிருந்து விலகும் தங்களது முடிவை அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement