Read in English
This Article is From Mar 20, 2019

அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆஸ்ட்ராய்டு... சிக்கலில் நாசா!

இது குறித்து பேசிய ஆராய்ச்சி தலைவர் டாண்டே லவ்ரிட்டா, ‘மறுபடியும் இந்த ஆராய்ச்சி குறித்து சிந்திக்க வேண்டியதுள்ளது' என்றுள்ளார்.

Advertisement
உலகம் Edited by

பூமியில் இருந்து 85 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அந்த ஆஸ்ட்ராய்டு

Washington:

பென்னு என்னும் ஆஸ்ட்ராய்டு குறித்து ஆராய ஆக்ஸிரிஸ் – ரெக்ஸ் என்னும் விண்வெளி ப்ரோபை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அனுப்பியது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா.

அந்த ஆஸ்ட்ராய்டை ஆராய்வதில் தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த ஆஸ்ட்ராய்டின் மேற்புறமே கற்களால் நிரம்பியுள்ளது. ஆஸ்ட்ராய்டின் மேற்புறம் எதிர்பார்த்தை விட கரடு முரடாக உள்ளதாகவும் மிகவும் வலிமையாக இருப்பதால், அந்த ஆஸ்ட்ராய்டில் இருந்து சிறு துண்டை ஆராய்ச்சிக்கு எடுப்பதே தற்போது சவாலாக உள்ளது எனவும் நாசா தரப்பு கூறுகிறது. 

இது குறித்து பேசிய ஆராய்ச்சி தலைவர் டாண்டே லவ்ரிட்டா, ‘மறுபடியும் இந்த ஆராய்ச்சி குறித்து சிந்திக்க வேண்டியதுள்ளது' என்றுள்ளார்.

சூரியனை சுற்றும் அந்த ஆஸ்ட்ராய்டு, பூமியில் இருந்து 85 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த ஆஸ்ட்ராய்டின் மேற்புறத்தில் இருந்து 60 கிராம் முதல் இரண்டு கிலோ கிராம் எடையிலான பொருட்களை எடுப்பதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.

Advertisement

ஆராய்ச்சிக்கான பொருட்களுடன் 2023 ஆம் ஆண்டில் பூமிக்கு வந்து சேரும் நாசா அனுப்பிய விண்வெளி ப்ரோப். பிற பெரிய விண்வெளிகளில் இருந்து விழுந்த பொருட்களால் ஆனதே இந்த பென்னு ஆஸ்ட்ராய்டு. அது 10 முதல் 150 மீட்டர் நீளத்தில் இருக்கும் பாகங்களை கொண்டுள்ளது.

 

Advertisement
Advertisement