74 வயது மூதாட்டி ஒருவர் ஐ.வி.எப் (IVF) முறையில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
Guntur: ஆந்திராவில் 74 வயது மூதாட்டி ஒருவர் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.வி.எப் (IVF) முறையில் கருத்தரித்த மங்கையம்மாவுக்கு குண்டூரில் உள்ள அஹல்யா நர்சரி மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
4 பேர் கொண்ட ஒரு மருத்துவர்கள் குழுவின் காண்காணிப்பின் கீழ் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
இதுகுறித்து தலைமை மருத்துவர் உமா சங்கர் கூறும்போது, தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளனர். அதிகமான வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தல்ஜிந்தர் கவுர் தனது 70ஆவது வயதில் ஆண் குழந்தை ஒன்றை பெற்று எடுத்தார்.
முன்னதாக, 55 வயதான பெண் ஒருவர் கருத்தரித்து தொடர்பாக செய்தி அறிந்து, கடந்தாண்டு குண்டூரில் உள்ள அஹல்யா மருத்துவமனைக்கு தம்பதியினர் சென்றுள்ளனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மங்கையம்மா கூறியபோது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். எங்களின் அனைத்து வேண்டுதல்களுக்கும் விடை கிடைத்துவிட்டது என்று அவர் கூறினார். மங்கையம்மாவின் கணவர் ராஜா ராவ் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமையில் இருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி உற்சாகமடைந்தனர்.
கடந்த மாதம், இந்த தம்பதியினர் கர்ப்பத்தின் எட்டாவது மாதத்தில் நிகழ்த்தப்படும் பாரம்பரிய விழாவான 'சீமந்தம்' செய்ய விரும்பினர். இருப்பினும், ஒரு மாதம் காத்திருக்குமாறு மருத்துவர்கள் அவர்களிடம் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, பிரசவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அந்த நர்சிங் ஹோம் வளாகத்தில் விழாவை ஏற்பாடு செய்தது. அதில், மருத்துவமனை ஊழியர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் தம்பதியினரை வாழ்த்தினர்.
அடுத்த சில நாட்களுக்கு இந்த குழந்தைகள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று மருத்துவர் உமா சங்கர் தெரிவித்துள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)