நவம்பர் மாத தொடக்கத்தில் யாவத்மால் மாவட்ட வனப்பகுதியில் பெண் புலி அவ்னி சூட்டுக் கொல்லப்பட்டது.
Mumbai: மகாராஷ்டிராவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சிவ சேனா பெண்புலி அவ்னி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியதோடு, முறையான விசாரணையைக் கோரியது.
வார அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய, சிவசேனாவின் மூத்த தலைவர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ராம்தாஸ் கதம் பெண்புலி அவ்னி கொல்லப்பட்டதற்கு முறையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.
பாஜக கட்சியின் மூத்த தலைவர் மற்றும் வனத்துறை அமைச்சர் சுதிர் முன்கந்திவார் இதுகுறித்து கூறுகையில், எனக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயம் குறித்து எதுவும் தெரியாது என்றார்.
முன்கந்திவார் கூறுகையில், நான் அமைச்சரவை கூட்டத்திற்கு வந்த போது அவ்னி பற்றி யாரும் பேசவில்லை. நான் இல்லாத சமயத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள் குறித்து எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
சிவசேனா கட்சியின் தலைவர் உதவ் தாக்ரே கூறுகையில், ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு பெண் புலி அவ்னியின் இறப்பு குறித்து விசாரிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.