বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 19, 2018

இம்ரான் கான் பதவியேற்பு விழா: கட்டிப்பிடி சர்ச்சையில் சிக்கிய நவ்ஜோத் சிங் சித்து

தேர்தலில் வெற்றி பெற்றதும் ஆற்றிய உரையில், இம்ரான் கான், “இருநாடுகளிடையே உறவை மேம்படுத்த இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால் பாகிஸ்தான் இரு அடி எடுத்துவைக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

Advertisement
இந்தியா Posted by

Highlights

  • பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற விழாவில் சித்து பங்கேற்பு.
  • பாகிஸ்தான் ஜெனரல் பாஜ்வாவை சித்து கட்டிப்பிடித்ததால் சர்ச்சை.
  • பாஜ்வா அமைதி குறித்துப் பேசியதாக சித்து விளக்கம்.
NEW DELHI:

பஞ்சாப் மாநில அமைச்சரான முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தனது ‘நண்பர்’ இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் சென்று வந்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட இம்ரான் கான் முயற்சிகள் எடுப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்றதும் ஆற்றிய உரையில், இம்ரான் கான், “இருநாடுகளிடையே உறவை மேம்படுத்த இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால் பாகிஸ்தான் இரு அடி எடுத்துவைக்கும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தனது பதவியேற்பு விழாவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், நவ்ஜோத் சிங் சித்து ஆகிய மூவரையும் இம்ரான் அழைத்திருந்தார். எனினும் இம்ரானைப் போலவே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் அரசியலில் ஈடுபட்டு வரும் நவ்ஜோத் சிங் சித்து மட்டுமே அழைப்பை ஏற்றுப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.

விழாவில் பாகிஸ்தானின் முக்கியத் தலைவர்களுக்கு சமமாக, சித்துவுக்கு முதல் வரிசையில் அவரது நண்பர் இம்ரான் கான் இடம் ஒதுக்கியிருந்தார். தனது அழைப்பை ஏற்று பாகிஸ்தான் வந்த சித்துவினைக் கட்டித் தழுவி இம்ரான் கான் வரவேற்றார்.

Advertisement

ஆனால் விழாவில் வேறு ஒருவரை நவ்ஜோத் கட்டிப்பிடித்தது சர்ச்சையாகியுள்ளது. வேறு யாருமல்ல, பாகிஸ்தான் இராணுவத்தின் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வாதான் அது.

இதுகுறித்துக் கூறிய சித்து, “பாகிஸ்தானின் முப்படைத் தலைவர்களும் முதல் வரிசையில் அமர்ந்துள்ள விருந்தினர்களுடன் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி என்னிடம் வந்த ஜெனரல் பாஜ்வா அவர்கள், தானொரு கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்ட ஜெனரல் என்று கூறினார். மேலும் எங்களுக்கு அமைதி வேண்டும் என்று என்னிடம் வேண்டிக்கொண்டார்” என்றார்.

Advertisement

இதற்கு முன்னரும் பல முறை பாகிஸ்தான் இராணுவத்தினர் இந்தியாவோடு அமைதி குறித்துப் பேசியுள்ளனர். எனினும் வெளியே இப்பட்டி அறிவித்தாலும் தீவிரவாதத் தாக்குதல்களை வளர்த்து விடுவதை பாகிஸ்தான் நிறுத்தவில்லை என்று இந்தியா நம்புவதால் இத்தகைய பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை காட்டுவதில்லை.

“ஆனால் பாகிஸ்தான் ஜெனரல் உண்மையிலேயே அமைதியை வலியுறுத்தினார். அவராகவே முன்வந்து பாகிஸ்தானின் கர்த்தர்புரில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாராவுக்கான வழித்தடத்தை 2019இல் சீக்கிய மத நிறுவனர் குரு நானக்கின் 550வது பிறந்த ஆண்டை முன்னிட்டு திறப்பதாக உறுதி அளித்தார். குரு நானக் இறுதியாக சமாதியான இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் குருத்வாரா அது. மேலும் பல நல்ல காரியங்களையும் செய்ய நினைக்கிறோம் என்று அவர் கூறினார். இந்தியாவும் பதிலுக்கு ஒரு அடி எடுத்து வைக்கவேண்டும்” என்று கூறுகிறார் சித்து.

Advertisement

பல ஆண்டுகளாகவே இவ்வழித்தடத்தைத் திறக்க பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு சீக்கியக் குழுக்கள் இந்திய அரசிடம் கோரி வந்தனர்.1998இல் இதுகுறித்து ஒரு புரிதல் ஏற்பட்டபோதும், திறக்காமலேயே விட்டுவிட்டனர்.

சித்து முதலில் பாஜகவில் இருந்து அம்ரித்சர் தொகுதி எம்பி ஆகி, பின்னர் கருத்துமோதல் ஏற்பட்டு விலகி காங்கிரசில் சேர்ந்தவர் ஆவார். ஹரியாணா அமைச்சர் அனில் விஜ், “நன்றிகெட்டதனமான செயல்” என்றும் பாஜ செய்தித்தொடர்பாளர் சம்பித் பாத்ரா, “வெட்கக்கேடானது” என்றும் சித்துவின் பாகிஸ்தான் பயணம் குறித்து விமர்சித்துள்ளதோடு காங்கிரஸ் கட்சி இவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர். இவற்றை எல்லாம் தான் கண்டுகொள்ளவில்லை என்று சித்து கூறினார். நான் எப்போதும் நேர்மறையான விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவன் என்று அவர் கூறினார்.

Advertisement

பேச்சுவார்த்தைகளை நிறுத்தும்போதே சந்தேகமும், நம்பிக்கையின்மையும் ஏற்படும் என்று வேதங்களைச் சுட்டிக்காட்டி பேசிய சித்து, தான் ‘வசுதைவ குடும்பகம்’ (உலகம் அனைத்தும் ஒரு குடும்பம்) என்னும் தத்துவத்தைப் பின்பற்றுபவன் என்றும் கூறி தன் மீதான சர்ச்சைகளுக்கு விளக்கமளித்தார்.

Advertisement