Read in English
This Article is From Nov 13, 2018

விமான பயணி ஒருவரின் பையில் பிடிபட்ட விஷப்பாம்பு!

பயணி ஒருவரின் பையில் விஷப்பாம்பு பிடிபட்டதால் அவரை சி.ஐ.எஸ்.ஃப். ஊழியர்கள் (C.I.S.F) நிறுத்தி வைத்தனர்

Advertisement
நகரங்கள்
Kochi:

கொச்சி விமானநிலையத்தில் கடந்த ஞாயிறு மாலை அன்று அரபு நாட்டிற்க்கு செல்லவிருந்த பயணி ஒருவரின் பையில் விஷப்பாம்பு பிடிபட்டதால் அவரை சி.ஐ.எஸ்.ஃப். ஊழியர்கள் (C.I.S.F) நிறுத்தி வைத்தனர்.

கேரளாவில் உள்ள பாலக்காட்டை சேர்ந்தவர் சுனில், அர் இந்தியா விமானத்தில் அபுதாபி வரை செல்ல இருந்த அவரை சி.ஐ.எஸ்.ஃப். ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனை செய்த பொழுது அவர் வைத்திருந்த சீன வகை உருளைகிழங்கு பாக்கெட்டில் விஷப்பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

தகவல் அறிந்த சி.ஐ.எஸ்.ஃப். ஊழியர்கள் ( சென்டரல். இன்டஸ்டரியல். செக்கியுரிட்டி. ஃபோர்ஸ்) அங்கு சோதனை செய்தனர். அதில் பிடிபட்ட பாம்பு இந்தியன் கேரெய்ட் என்னும் கடும் விஷம் உள்ள வகையை சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் சுனிலை விமானநிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், மார்க்கெட்டில் வாங்கிய உருளைகிழங்கு பாக்கெட்டில் சிறிய வகை பாம்பு இருந்தது அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் என்பதால் அவர் மேல் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் போலீசார் வீட்டிற்க்கு செல்ல அனுமதி தந்ததாக சி.ஐ.எஸ்.ஃப். ஊழியர் தெரிவித்தார்.

Advertisement
Advertisement