Read in English
This Article is From Jan 22, 2019

நடுக்கடலில் பற்றி எரிந்த கப்பல்கள் : இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவின் கடல் எல்லை பகுதியில் கப்பல் விபத்து ஏற்பட்டுள்ளது. 2 கப்பல்களிலும் தான்சானியா நாட்டின் கொடி பறந்தது. ஒரு கப்பலில் திரவ இயற்கை எரிவாயுவும் (எல்.என்.ஜி.) மற்றொரு கப்பலில் அதனை நிரப்பும் டாங்கும் இருந்துள்ளன. எரிபொருள் மாற்றம் செய்யும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறது.

Advertisement
இந்தியா

2 கப்பல்களும் தீப்பிடித்து எரியும் காட்சி.

Highlights

  • எரிபொருள் மாற்றம் செய்யும்போது தீ விபத்து ஏற்பட்டு கப்பல்கள் எரிந்தன.
  • இரு கப்பல்களிலும் 15 இந்தியர்கள் இருந்தனர்
  • வானிலை மோசமாக உள்ளதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
Moscow:

ரஷ்யா கடல் பகுதியில் 2 எரிபொருள் கப்பல்கள் பற்றி எரிந்துள்ளன. இதில் இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விபத்துக்குள்ளான 2 கப்பல்களிலும் தான்சானியா நாட்டுக் கொடி பறந்துள்ளது. ஒரு கப்பலில் திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.) இருந்திருக்கிறது. மற்றொரு கப்பலில் காலியான டாங்க் இருந்துள்ளது. ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருள் மாற்றம் செய்தபோது தீ விபத்து ஏற்பட்டு கப்பல்கள் பற்றி எரிந்துள்ளன. 

ஒரு கப்பலின் பெயர் கேண்டி. அதில் 17 பேர் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் 8 பேர் இந்தியர்கள். துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் 9 பேர் அந்தக் கப்பலில் இருந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான இன்னொரு கப்பலின் பெயர் தி மேஸ்ட்ரோ. அதில் 15 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் 7 பேர். இந்தியாவை சேர்ந்தவர்கள் 7 பேர். இதேபோன்று லிபியா, ரஷ்யாவை சேர்ந்தவர்களும் தி மேஸ்ட்ரோவில் இடம் பெற்றிருந்தனர். 

Advertisement

நடந்திருக்கும் விபத்தில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபதுது நடந்த இடத்தில் மோசமான வானிலை காணப்படுவதால் உயிரிழந்தவர்களின் உடல்களையும், கப்பலில் சிக்கித் தவிப்பவர்களையும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

வானிலை சாதகமாகும் போது மீட்பு பணிகளை தொடங்குவதற்காக ரஷ்ய கடலோர பாதுகாப்பு படை மற்றும் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. 

Advertisement
Advertisement