This Article is From Jul 05, 2018

அனற்காற்று காரணமாக கனடாவில் 17 பேர் உயிரிழப்பு!

மான்ட்ரியல் பகுதியில் 12 பேரும், க்யூபெக்கின் கிழக்குப் பகுதியில் மீதம் இருப்பவர்களும் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது

அனற்காற்று காரணமாக கனடாவில் 17 பேர் உயிரிழப்பு!

ஹைலைட்ஸ்

  • கனடாவின் கிழக்குப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது
  • இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களாக இருந்துள்ளனர்
  • குளிர்சாதன வசதி இல்லாதவர்களுக்கு அனற்காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்

கனடா நாட்டில் இருக்கும் க்யூபெக்கில் அனற்காற்று மற்றும் மிகுந்த வறண்ட வானிலை காரணமாக  குறைந்தபட்சம் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உள்ளூர் சுகாதாரத் துறை, ‘அனற்காற்று காரணமாக உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் 50 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களாக இருக்கின்றனர். அனைவரும் தனியாக வாழ்ந்து வந்தவர்களாக இருந்துள்ளனர். மேலும், அவர்கள் யார் வீட்டிலும் குளிர்சாதன வசதி இல்லை’ என்று தெரிவித்துள்ளது.

மான்ட்ரியல் பகுதியில் 12 பேரும், க்யூபெக்கின் கிழக்குப் பகுதியில் மீதம் இருப்பவர்களும் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, மான்ட்ரியல் சுகாதாரத் துறை வளாகங்கள் மற்றும் சமூகநலக் கூடங்களுக்குச் சொந்தமான 19 இடங்களில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் க்யூபெக்கின் உள்ளூர் நிர்வாகம், அனற்காற்று தாக்கும் வகையில் இருக்கும் அக்கம் பக்கத்தினர் பற்றி தெரிந்து கொள்ளவும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

.