বাংলায় পড়ুন Read in English
This Article is From Feb 27, 2020

சுவர் இல்லாத பாலம்!! ஆற்றுக்குள் பேருந்து தவறி விழுந்ததில் 25 பேர் உயிரிழப்பு!

Rajasthan Bus Accident: 11 ஆண்கள், 10 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் என மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து, பாலத்திலிருந்து கவிழ்ந்து மேஜ் ஆற்றுக்குள் விழுந்தது.

Highlights

  • திருமணத்திற்கு சென்ற பேருந்தில் 28 பேர் இருந்தனர்
  • 13 பேர் சம்பவ இடத்திலும் 10 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்
  • பேருந்து விபத்துக்கு முதல்வர் அஷோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Kota:

ராஜஸ்தானில் பாலம் ஒன்றில் சுவர் இல்லாததால் அந்த பகுதியில் வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த சம்பவத்தில் பேருந்திலிருந்த 25 பேர் உயிரிழந்துள்ளனர். 

அவர்களில் 11 ஆண்கள், 10 பெண்கள், 3 பேர் குழந்தைகள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் கோடாவிலிருந்து சவாய் மதோபூரை நோக்கி தனியார் பேருந்து 28 பேருடன் சென்று கொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிலிருந்தவர்கள் சென்று கொண்டிருந்தனர். 

பண்டி மாவட்டத்தில் கோடா - டவுசா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, பப்டி கிராமத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. துரதிருஷ்டவசமாக தேஜ் ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலத்தில் சுவர்கள் இல்லை. இதனால் அந்த பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வந்த பேருந்து, நேராக ஆற்றுக்குள் விழுந்தது.

Advertisement

இந்த சம்பவத்தில் பேருந்திலிருந்த 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 10 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியானார்கள். 

காயம் அடைந்த சிலர் லேகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் கோடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், 'பண்டியில் ஆற்றில் பேருந்து விழுந்து 25 பேர் விபத்தில் உயிரிழந்த அறிந்து துயரத்தில் உள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடையப் பிரார்த்திக்கிறேன்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

. I am deeply saddened to learn about the tragic accident in #Bundi in which about 25 people have lost lives after the bus fell into river Mej.. My heartfelt condolences to the bereaved families who have lost their loves ones in this tragedy. I wish speedy recovery to all injured.

ராஜஸ்தானின் முக்கிய நதியான சம்பலின் துணையாறு தேஜ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement