This Article is From Dec 09, 2018

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் மாபெரும் பேரணி!

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் வலதுசாரி அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் தலைமையில் நடக்கும் பேரணியில் 1.5 லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.

விஸ்வ இந்து பரிஷத் தலைமையிலான இந்த பேரணியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

New Delhi:

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் வலதுசாரி அமைப்புகளின் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது.  நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அரசாணை இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவின் கருத்தியல் வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் இந்த பேரணியில் பங்கேற்றன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விரைவில் கூட உள்ள நிலையில் இந்த கூட்டம் நடந்துள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மூத்த ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் பையாஜி ஜோஷி, பாஜக பெயரை குறிப்பிடாமல் அந்த கட்சியையும், ஆட்சியையும் கடுமையாக விமர்சித்தார்.

j52mptsg

இன்று மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். மக்களின் குரலைக் காது கொடுத்துக் கேட்டு, அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் அதற்காக பிச்சை எடுக்கவில்லை எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். இந்த நாட்டிற்கு ராமர் ஆட்சி தேவை என்று அவர் கூறினார்.

 

bl46c8dg

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பாஜக தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது. ஆனால், ஆட்சி காலம் முடிய உள்ள நிலையில் அயோத்தி விவகார வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், எந்த முடிவும் எடுக்க முடியாமல் மத்திய அரசு உள்ளது.

.