Read in English
This Article is From Jul 16, 2018

இராணுவ வீரரின் இறுதி சடங்கில், கண் கலங்க வைத்த ஐந்து வயது மகள்

வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் முகுத் பிஹாரி மீனாவின் உடலுக்கு, பொது மக்கள், காவல் துறையினர், இராணுவ அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்

Advertisement
இந்தியா
Jaipur:

ஜெய்பூர்: கடந்த ஜுலை 11 ஆம் தேதி, காஷ்மீரில், தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் முகுத் பிஹாரி மீனாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது.

இறுதி சடங்குகள் நடைப்பெற்று வந்த போது, மரணம் அடைந்த இராணுவ வீரரின் ஐந்து வயது குழந்தை, சவப்பெட்டியின் மீது அமர்ந்திருந்தது, அனைவரையும் கண் கலங்க வைத்தது.

இந்த காட்சியை கண்ட ஜாலாவார் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர சோனி, உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். “உன் தகப்பனின் சவப்பெட்டியின் மீது நீ அமர்ந்திருந்தாய். இதற்கு முன்பு, உன் தந்தையின் அன்பு முகத்தை நீ கண்டிருப்பாய். நானும், மற்ற இராணுவ அதிகாரிகளும் உன்னுடைய குழந்தை முகத்தை கண்டு மனம் வருந்தினோம். இந்த நாட்டின் பொறுப்பிமிக்க விவேகமிக்க ஒவ்வொரு குடிமக்களின் ஆசிர்வாதமும் உனக்கு எப்போதும் உண்டு. நல்ல முறையில் வளர்ந்து உன் தந்தையின் வீர மரணத்திற்கு நீ பெருமை சேர்க்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

25வயதே ஆன இராணுவ வீரரின் உடலுக்கு, பொது மக்கள், காவல் துறையினர், இராணுவ அதிகாரிகள் என ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement
Advertisement