This Article is From Aug 17, 2018

சிறந்த பேச்சாளர் வாஜ்பாயின் தவிர்க்க முடியாத 5 கூற்றுகள்!

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார்

New Delhi:

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். கவிஞர், பேச்சாளர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாராளுமன்ற உறுப்பினர் என பன்முகத் தன்மை கொண்டவர் இவர் மூன்று முறை பிரதமர் பதவி வகித்தவர்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து முக்கிய கூற்றுகள் இங்கே பகிரப்படுகிறது

“பொக்ரான் பகுதியில் இன்று, 3.45 மணியளவில், இந்தியா மூன்று நிலத்தடி அணு ஆயுத சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று இந்தியாவின் அணு ஆயுத சோதனை குறித்து வாஜ்பாய் அறிவிப்பு வெளியிட்டார்.
 


“பெரும்பான்மையினரின் முடிவுக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம். மதிப்பிற்குரிய நாடாளுமன்ற சபாநாயகர் அவர்களே, நான் என்னுடைய ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவரிடம் அளிக்க இருக்கிறேன்” என்று 1996 ஆண்டு வாஜ்பாய் தெரிவித்திருந்தார்.

“இந்திய மக்களே, இந்த சுதந்தர தினத்தன்று நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நம் கனவுகளை நிஜமாக்க வேண்டும், “ஜெய் ஹிந்த்” என்று கூறி, வெற்றிகளை குவிக்க வேண்டும்.” என்று 2002 - ஆம் ஆண்டு நடைப்பெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் வாஜ்பாய் கூறினார்.

“கள்ளங்கபடமற்று இரு நாடுகளும் பேசும் போது, அறிவியல் தொழில்நுட்பம், உலக அமைதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு ஆகியவை முன்னேற்றம் அடையும். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஒவ்வாமையை நீக்க செயல்பட வேண்டும்.” என்றார்.


“யாரையும் தாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. பொக்ரான் 2 முதல் லாகூர் வரையிலான பேருந்து சேவை குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. அது நாணயத்தின் இரு பக்கங்களைப் போல, அதில் பாதுகாப்பும் தோழமையும் இணைந்து இருக்கும்.” என்று பொரான் அணு ஆயுத சோதனை குறித்துப் பேசினார்.

.