New Delhi: கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் நலம் பற்றி விசாரிக்க பல அரசியல் தலைவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்தனர். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 9 வாரங்களாக அவர் எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் 10-வது பிரதமரான வாஜ்பாய், சிறுநீரக தொற்று மற்றும் இதய நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இன்று காலை அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும், அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் எய்மஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்ட பிறகு பொது வாழ்வில் இருந்து விலக் இருக்கிறார் வாஜ்பாய். கடந்த 30 ஆண்டுகளாக, ரந்தீப் கலீரியா என்ற மருத்துவரின் கண்காணிப்பில் அவர் சிக்ச்சை பெற்று வருகிறார். இவருடன் மேலும் சில சிறப்பு மருத்துவர்களும், வாஜ்பாய்க்கு தற்போது சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நேற்று மாலை பிரதமர் மோடி, வாஜ்பாயை நேரில் சென்று நலம் விசாரித்தார். இது அவர் மருத்துவமனையில் அனுமதித்த பிறகு நான்காவது முறையாகும். மேலும், பா.ஜ.க தலைவர் அமித் ஷா, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, மூத்த பா.ஜ.க தலைவர் அத்வானி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ஸ்மிரிதி இரானி ஆகியோரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் நிலைமையை கேட்டறிந்தனர்.
வாஜ்பாய் அமைச்சரவையில் ஒருவராக இருந்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மாலை எய்ம்ஸ் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மனோஜ் சிசோடியாவும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இந்திய பிரதமராக 3 முறை பதவி வகித்துள்ளார் வாஜ்பாய். 1996-ம் ஆண்டு 13 நாட்களும், 1998-ம் ஆண்டு 13 மாதங்களும், 1999-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளார். காங்கிரஸ் அல்லாது 5 ஆண்டுகள் முழுமையாக நீடித்த ஒரு ஆட்சி, வாஜ்பாயினுடைய ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது.