வாஜ்பாயால் வாழ்வில் உத்வேகம் பெற்ற இலட்சக்கணக்கானோருள் நானும் ஒருவன்: ராஜ்நாத் சிங் Story:
New Delhi: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் உடல் டெல்லியிலுள்ள அவரது இல்லத்துக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகக் கொண்டு செல்லப்படுகிறது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் ராஜ்நாத் இன்று இருமுறை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வாஜ்பாயியின் மறைவு குறித்து அவர் தெரிவிக்கையில், "இந்தியர்கள் அனைவரும் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்று கனவுகண்ட ஒரு மாபெரும் தலைவரை நாடு இழந்துவிட்டது. தனிப்பட்ட முறையிலும் இது எனக்குப் பேரிழப்பாகும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகத்தில் உள்ளேன். வாஜ்பாயி கூர்மையான தலைமைப்பண்புகளுடன் விளங்கிய ராஜதந்திரி ஆவார். அடல்ஜி அவர்கள் பல அரசியல் கட்சிகளிலும் நண்பர்களைக் கொண்டிருந்த அஜத்சத்ரு (எதிரிகளற்றவன்) ஆவார். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அவரது இப்பண்பு அரசியலில் நல்ல விளைவுகளை உண்டாக்கியது. வாஜ்பாயால் உத்வேகம் பெற்ற பல இலட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். அவரது தடத்தைப் பின்பற்றாமல் போயிருந்தால் என் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும் என்றே என்னால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
93 வயதான முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.