This Article is From Aug 14, 2019

அத்திவரதரை தரிசிக்க வந்த கர்ப்பிணிக்கு கோயில் வளாகத்திலேயே சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை!!

Athi varadar: ஆண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து தாயும், சேயும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்திவரதரை தரிசிக்க வந்த கர்ப்பிணிக்கு கோயில் வளாகத்திலேயே சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை!!

Athi varadar darshan: வரும் 17-ம் தேதியுடன் அத்தி வரதர் மீண்டும் குளத்திற்குள் வைக்கப்படவுள்ளார்.

அத்தி வரதரை தரிசிக்க வந்த கர்ப்பிணிக்கு கோயில் வளாகத்திலேயே சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிவில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதர் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழா கடந்த ஜூலை 1-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ஆகஸ்ட் 16-ம்தேதி வரை அத்தி வரதர் தரிசனம் நடைபெறும். 17-ம்தேதி மீண்டும் குளத்திற்குள் அத்தி வரதர் வைக்கப்படவுள்ளார். தரிசனம் இன்னும் 2 நாட்களே நடைபெறும் என்பதால் லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரத்தில் குவிந்துள்ளனர். இந்த நிலையில், தரிசனத்திற்கு வந்த கர்ப்பிணி ஒருவர் கோயில் வளாகத்திலேயே சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் சோளிங்கரை அடுத்துள்ள பானவாரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் விமலா. கர்ப்பிணியான இவர் இன்று காலை அத்தி வரதரை சந்தித்தார். பின்னர் திரும்பும் வரிசையில் வந்து கொண்டிருந்தபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. 

இதையடுத்து, கோயில் வளாகத்தில் இருக்கும் மருத்துவ முகாமுக்கு விமலாவை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு இருந்த மருத்துவ உதவியாளர் மற்றும் செவிலியர் ஆகியோர் பிரசவம் பார்த்துள்ளனர். இதில் விமலாவுக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும் சேயும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

.