This Article is From Aug 01, 2019

நின்ற நிலையில் அருள் பாலிக்கும் அத்தி வரதர்! லட்சக்கணக்கானோர் தரிசனம்!!

40 ஆண்டுக்கு ஒருமுறை இந்த அத்தி வரதர் வைபவம் நடந்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement
தமிழ்நாடு Written by

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அத்தி வரதர் இன்று முதல் நின்ற நிலையில் அருள்பாலிக்கத் தொடங்கியுள்ளார். அவரைக் காண லட்சக்கணக்கானோர் நாள்தோறும் வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரதராஜர் பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு வைபவம் கடந்த ஜூலை 1-ம்தேதி தொடங்கியது. அன்று முதல் ஜூலை 31-ம்தேதியான நேற்று வரைக்கும் சயன திருக்கோலத்தில்  அருள் பாலித்து வந்தார். அவரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். 

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை குடியரசு தலைவர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் விஐபி.க்களும் தரிசனம் செய்தனர். 

இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர்  காட்சியளித்து வருகிறது. அவரைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். 

Advertisement

ஆகஸ்ட் 17-ம்தேதி வரைக்கும் அத்தி வரதர் நின்ற நிலையில் அருள் பாலிப்பார் என்பதால் அவரை தரிசிப்பதற்கு இன்னும் பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

Advertisement