அத்தி வரதரை தரிசிக்க இன்று பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்திலிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் செல்கிறார். அங்கு 3மணியளவில் கோயிலுக்கு செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் 3 மணிமுதல் 4 மணி வரை அத்திவரதரை தரிசனம் செய்யவுள்ளத்தால் 4.30 மணியிலிருந்து பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.