This Article is From Oct 17, 2018

மகாராஷ்டிராவில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி முறியடிப்பு - 2 பேர் கைது

ஸ்கிம்மெர் மெஷின் மூலம் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் ஏ.டி.எம். பாஸ்வேர்டை திருடி கொள்ளையர்கள் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட முயன்றதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மகாராஷ்டிராவில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி முறியடிப்பு - 2 பேர் கைது

ஸ்கிம்மர் மெஷின் மூலம் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன

Thane:

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் பெரும் கொள்ளை ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது.
தானேவில் உள்ள மிரா பயந்தார் பகுதியில் வசிப்பவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஏடிஎம் பாஸ்வேர்டை கொள்ளையர்கள் திருடியுள்ளனர். இதனைப் பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையர்கள் பறித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், வங்கி கணக்கில் இருந்து பணம் அவ்வப்போது எடுக்கப்படுவதாக எங்களுக்கு புகார்கள் கிடைத்தது. போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி இந்த கொள்ளை சம்பவம் நடக்கும் என நாங்கள் சந்தேகப்பட்டோம்.

இதன் அடிப்படையில், நாங்கள் நடத்திய விசாரணையில் கிஷோர் நய்யா, ஹேமந்த் ஜெய்ன் என்ற 2 பேரை கைது செய்திருக்கிறோம். விசாரணையின்போது, அவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

ஸ்கிம்மர் மெஷின் மூலமாக ஏடிஎம் கார்டுகளில் உள்ள தகவல்களை அவர்கள் பெற்றுள்ளனர். பின்னர் பாஸ்வேர்டு தெரிந்து கொண்ட பின்னர் போலி ஏடிஎம் அட்டைகளின் உதவியால் அவர்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக போலீசார் கூறினர்.
 

.