சென்னை, விருகம்பாக்கத்தில் இருந்த பிரியாணி கடையில் தகராறில் ஈடுபட்ட முன்னாற் திமுக உறுப்பினர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
திமுக-விலிருந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சில வாரங்களுக்கு முன்னர், விருகம்பாக்கத்தில் இருக்கும் பிரியாணி கடைக்குச் சென்றனர். அப்போது, அவர்கள் கடை மூடும் நேரத்துக்குச் சென்று பிரியாணி கொடுக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து, யுவராஜ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் கடை ஊழியர்களை பாக்சிங் பாணியில் சரமாரியாக தாக்கினர். இந்த அனைத்து சம்பவங்களும் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. யுவராஜை தவிர மற்றவர்கள் கைது செய்யப்படனர். ஆனால், அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், அவரும் தற்போது சரணடைந்துள்ளதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து திமுக-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கழகக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
சம்பவம் நடந்த உணவகத்துக்குச் சென்று தாக்கப்பட்டவர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)