Read in English
This Article is From Oct 14, 2018

மும்பையில் பத்திரிகையாளர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்

பத்திரிகையாளர் மீதான தாக்குதலை கண்டித்துள்ள பத்திரிகையாளர் சங்கம், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது

Advertisement
நகரங்கள்

6 பேர் கொண்ட கும்பல் பத்திரிகையாளர் ஹெர்மான் கோம்ஸை தாக்கியுள்ளது

Mumbai:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஹெர்மன் கோம்ஸ் என்ற பத்திரிகையாளர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் சனிக்கிழமை இரவு தனது நண்பருடன் டாக்ஸி ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அவரது வீட்டின் அருகே ஞாயிறன்று அதிகாலை 1.30-க்கு வந்திறங்கியபோது, அவரை 6 பேர் கொண்ட கும்பல் கண்காணித்துக் கொண்டிருந்தது. இதன்பின்னர், கோம்ஸை தகாத வார்த்தைகளால் பேசிய கும்பலில் இருந்தவர்கள், சற்று நேரத்தில் தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

இதில் கோம்ஸின் முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் நிலையத்தில் கோம்ஸ் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பத்திரிகையாளர் சங்கம், கோம்ஸ் புகார் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விவகாரத்தில் முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement
Advertisement