This Article is From Oct 15, 2018

கொலையில் முடிந்த வாட்ஸ் ஆப் பதிவு!

இருதரப்பினருக்கு ஏற்பட்ட பகையின் காரணமாக இக்கொளை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக போலீசார் கூறினர்

கொலையில் முடிந்த வாட்ஸ் ஆப் பதிவு!

அவுரங்கபாத்தில் இருபது பேர் கொண்டகுழு ரியல் எஸ்டேட் புரோக்கரை தாக்கியுள்ளனர்

Aurangabad:

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் வாட்ஸ் ஆப் குழுவில் கருத்தை பதிவிட்டதனால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் கூறியுள்ளார்.

அவுரங்கபாத்தின் பாத்திமா நகரைச் சேர்ந்த், மொயின் முகமது பதான்(35) என்பவரை கடந்த ஞாயிறன்று 20பேர் கொண்ட கும்பல் ஒன்று இரவு கத்தி, கம்பி, மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளார்கள்.

இருகும்பலுக்குள் ஏற்பட்ட பகையின் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் கண்டறிந்துள்ளனர். ஞாயிறன்று மாலையில், வாட்ஸ் ஆப் குரூப்பில் தனது தரப்பினரை சவால் விடும்படி கருத்தினை பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பதான் தாக்கப்பட்டுள்ளார். அவரது உறவினர் இர்பான் ரஹீமை காப்பற்ற முயன்றுள்ளார். அதனால் அவரும் தாக்கப்பட்டுள்ளார்.

அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பதான் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. திங்களன்று காலையில் போலீசார் இக்கொலையுடன் தொடர்புடைய 6 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருவதாக அதிகாரிகள் கூறினார்கள்.

.