பாஜகவைக் தமிழகத்தில் காலூன்ற வைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாளைக் முன்னிட்டு கோவை அவினாசி சாலையில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பாஜகவுடன் நல்ல நட்போடுதான் இருக்கிறோம். அதற்காக, அவர்கள் கொண்டு வரும் எல்லா திட்டத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. அதிமுக கொள்கை உடைய கட்சி, பாஜகவைக் தமிழகத்தில் காலூன்ற வைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது.
பாஜகவைக் சுமத்து கொண்டு காலூன்ற வைக்க, அதிமுக என்ன பாவமா செய்தது? பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை. தேர்தல் வரும் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அதிமுக கட்சியைக் வளர்க்க நாங்கள் பாடுபடுவோமே தவிர, இன்னொரு கட்சியை வளர்க்க நாங்கள் பாடுபட மாட்டோம் என்றார்.
தொடர்ந்து அவரிடம் கொடநாடு விவாகரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், கொடநாடு விவகாரம் ஒரு புணையப்பட்ட நாடகம். அதில் எந்த உண்மையுமில்லை, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் நாடகமாடி கொண்டிருக்கின்றனர்.
அதிமுகவின் வெற்றியைக் சீர்குலைப்பதற்காக இந்த நாடகத்தைக் திமுகவும், காங்கிரஸூம் நிகழ்த்துகிறது. முதலில் குட்கா விவாகரத்தில் சிபிஐ விசாரணை கேட்டார்கள். தற்போது இந்த விவகாரத்தைக் நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.