"Responsibility"யில் ஒரு ஐ-யை தவரவிட்டு "Responsibilty" என அச்சடிக்கப்பட்டிருந்த 50 டாலர் நோட்டுகள்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு வானொலி மையம் தன் சமுக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த இந்த புகைப்படத்தை கண்டதற்கு பிறகு,இந்த செய்தி அனைத்து இடங்களுக்கும் வைரலாக பரவி வருகிறது. ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியும், தான் அச்சடித்த 50 லாலர் நோட்டுகளில் பிழை இருப்பதை ஒப்புக்கொண்டது.
அந்த நாட்டை சேர்ந்த அல்ஜசிரா பத்திரிகை, 50 டாலர்கள் நோட்டுகளில் சரியாக எடித் கவன்(Edith Cowan) தோள்களுக்கு மேலாக பிழை உள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது.
எடித் கவன் என்பவர், ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பணியாற்றிய முதல் பெண்மனி. இவர் 1921 முதல் 1924 வரை ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். இவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலிய அரசாங்கம், தான் வெளியிடும் 50 டாலர்களின் பின்பக்கத்தில் இவருடைய புகைப்படத்தை அச்சிட்டு வெளியிட்டது. அந்த நோட்டுகளில் எடித் கவன் கூறிய," இங்கு இருப்பவர்களில் ஒரே பெண் நான் என்பதால் எனக்கு அதிக பொறுப்பு உள்ளது மற்றும் மற்ற பெண்களும் இந்த இடத்திற்கு வர வேண்டும் என நான் வலியுறுத்த விரும்புகிறேன்" என்று கூறிய வார்த்தைகளை ஆங்கிலத்தில், மிகச்சிரியதாக, தொடர்ந்து அடுக்காடுக்காக அந்த டாலர் நோட்டுகளில் அச்சடித்திருப்பார்கள்.
அதில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட 50 டாலர் நோட்டுகளில், "Responsibility" எனக் கூறப்பட்டிருந்த வார்த்தைக்கு பதில், ஒரு ஐ-யை தவறவிட்டு "Responsibilty" என அச்சடித்திருந்தார்கள். அந்த எழுத்துக்கள் சாதாரனமாக கண்களுக்கு தெரியாது. ஒருவேளை அந்த வானொலி நிலையத்தை சேர்ந்தவர்கள் மைக்ரோஸ்கோப் வைத்து தேடியிருப்பார்கள் போல. அந்த தவறை கண்டுபிடித்துவிட்டனர்.
இந்த டாலர் நோட்டுகளை திரும்பிப்பெறும் நடவடிக்கையில், அந்த ரீசர்வ் வங்கி இடுபடப்போவதில்லை எனத் தெரிகிறது. இந்த பிழை குறித்து, ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியை சேர்ந்த ஒரு அதிகாரி அல் ஜசிரா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், தங்களுடைய தவரை ஒப்புக்கொண்டு இனி அச்சடிக்கப்படும் நோட்டுகளில், இந்த தவறு திருத்தம் செய்யப்பட்டு அச்சடிக்கப்படும் என கூறினார்.
Click for more
trending news