This Article is From Nov 09, 2018

வலுவான இந்தியாவை சந்திக்கும் ஸ்டார்க் இல்லாத ஆஸ்திரேலிய‌ அணி!

அரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 19 ஒருநாள் போட்டியில் தோற்றுள்ளது

வலுவான இந்தியாவை சந்திக்கும் ஸ்டார்க் இல்லாத ஆஸ்திரேலிய‌ அணி!

உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர்கள் அடுத்தடுத்து வரவுள்ளன. அதனால் டி20 அணியையும், டெஸ்ட் அணியையும் சரியாக் தேர்வு செய்துள்ளோம்

இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. டி20 தொருக்கான‌ ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், சுழற்பந்துவீச்சாளர் லயன், ஆல்ரவுண்டர் மிட்சல் மார்ஷ் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் தென்னாப்பிரிக்காவிடனான ஒரு டி20 மற்றும் இந்தியாவுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்த அணியில் ஸ்டோனின்ஸ், பான்க்ராஃப்ட் ஆகியோர் ஜொலிப்பார்கள் என்று கூறினார்.

உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர்கள் அடுத்தடுத்து வரவுள்ளன. அதனால் டி20 அணியையும், டெஸ்ட் அணியையும் சரியாக் தேர்வு செய்துள்ளோம். எல்லாருக்கும் எல்லா வடிவிலான கிரிக்கெட்டிலும் ஆட விரும்பம் உள்ள தேவைக்கு ஏற்ப அவர்களது பங்களிப்பு அணியில் இருக்கும் என்றார். அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தலைமையிலான டி20 அணி 3-0 என்று முழுமையாக பாகிஸ்தானிடம் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.

ஆரோன் பின்ச்(கேப்டன்), அலெக்ஸ் கேரே, ஆஷ்டன் அகார், ஜேஸன் பான்க்ராஃப்ட், நதன் கோல்டர்நைல், கிரிஸ்லயன், க்ளேன் மேக்ஸ்வெல், பென் மெக்டிமோட், டார்ஸி ஷார்ட், பில்லி ஸ்டான்லேக், மார்க்கஸ் ஸ்டோனின்ஸ், ஆன்ட்ரூ டை, ஆடம் ஸம்பா.

.