Read in English
This Article is From May 15, 2020

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரை திருமணம் செய்த ஆஸ்திரிய இளவரசி 31 வயதில் காலமானார்!

1988 ஆம் ஆண்டு லுக்சம்பெர்கில் பிறந்த மரியா, 5 வயதில் ரஷ்யாவுக்குச் சென்றார். பெல்ஜியமில் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தார். 

Advertisement
உலகம் Edited by

தனது மகன் மாக்சிமை, மரியா அதிகம் நேசித்துள்ளார். அவர் அடிக்கடி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மாக்சிமின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Texas :

ஆஸ்திரிய நாட்டின் இளவரசி மரியா கலிட்சின், அமெரிக்காவின் ஹூஸ்டனில் 31 வயதில் காலமாகியுள்ளார். அவருக்கு திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளதாக ஃபாக்ஸ் செய்தி தகவல் தெரிவித்துள்ளது. 

மரியவுக்கு திடீரென்று ஏற்பட்ட cardiac aneurysm என்னும் பிரச்னையால் இயற்கை எய்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் வல்லுநரான ரிஷி ரூப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் அவர்களது திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு மாக்சிம் என்கிற இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளது. 

இளவரசியாக இருந்தாலும் மரியா, ஹூஸ்டனில் இன்டீரியர் டிசைனராக பணி செய்து வந்தார். ஹூஸ்டனில் மிகவும் புகழ் பெற்ற செஃபாக விளங்குபவர் ரிஷி ரூப் சிங். 

கடந்த மே 4 ஆம் தேதி மரியா, உயிரிழந்துள்ளார். அவர் இறந்த நான்கு நாட்களுக்குப் பின்னர் ஹூஸ்டனில் உள்ள ஃபாரஸ்ட் பார்க் வெஸ்தெய்மெர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். 

Advertisement

தனது மகன் மாக்சிமை, மரியா அதிகம் நேசித்துள்ளார். அவர் அடிக்கடி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மாக்சிமின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

இளவரசி மரியாவுக்கு, சீனியா கலிட்சின் டி மட்டா, டாடியானா கலிட்சின் சீரா மற்றும் இளவசரி அலெக்சாண்டா உள்ளிட்ட மூன்று சகோதரிகளும், இளவரசர் திமித்ரி மற்றும் இளவரசர் லோவான் ஆகிய சகோதரர்களும் உள்ளனர். 

Advertisement

1988 ஆம் ஆண்டு லுக்சம்பெர்கில் பிறந்த மரியா, 5 வயதில் ரஷ்யாவுக்குச் சென்றார். பெல்ஜியமில் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தார். 

கல்வியை முடித்தப் பின்னர் புருசெல்ஸ், சிக்காகோ, இலினோய் மற்றும் ஹூஸ்டனில் பணியாற்றியுள்ளார் இளவரசி மரியா.

Advertisement


 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement