This Article is From Apr 27, 2019

வசூலில் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: இந்தியாவில் ஒபனிங் டே கலெக்ஷன் என்ன தெரியுமா?

Avengers: Endgame box office collection: ஆசியா மற்றும் சீனா நாடுகளில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இன்று வரை 169 மில்லியன் டாலர் வருமானத்தைப் பெற்றுள்ளது என்று ஏஎஃப்பி அறிக்கை வெளியிட்டுள்ளது.

வசூலில் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்:  இந்தியாவில் ஒபனிங் டே கலெக்ஷன் என்ன தெரியுமா?

Avengers: Endgame box office collection: படத்தில் வரும் ஒரு காட்சி (Image courtesy: YouTube)

ஹைலைட்ஸ்

  • பாகுபலி மற்றும் 2.0 க்குப் பின் 3 வது இடத்தை பெற்றுள்ளது.
  • சீனா மற்றும் ஆஸ்திரேலியாவில் முதல்நாளே வசூலில் சாதனை படைத்தது
  • அவென்ஞ்சர் உலகளவில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது
New Delhi:

அவென்ஞ்சர்ஸ் திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்களை முறியடித்துள்ளது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் இந்தியாவில் ஏப்ரல் 26ல் வெளியானது. படம் வெளியான முதல் நாளே 50 கோடி கலெக்‌ஷனைப் பெற்றது. இந்தியாவில் இதன் கலெக்‌ஷன் 3 வது இடத்தைப் பெற்றுள்ளது. நிகர வருமானத்தில் பாகுபலி மற்றும் தி கன்குலுசன் 2.0 படத்திற்கு அடுத்த படியாக அவென்ஞ்சர்ஸ் உள்ளது.

இருப்பினும் இதன் கலெக்‌ஷன் அளவு  குறித்து உறுதியாகத் தெரியவில்லை. இந்தப்படம் 2,845 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. அவென்ஞர்ஸ் முன்கூட்டியே விற்பனைக்கு வந்தது. சில தியேட்டர்களில் 24 மணிநேரம் இந்தப் படத்தை திரையிட்டு வருகின்றனர்.

ஆசியா மற்றும் சீனா நாடுகளில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இன்று வரை 169 மில்லியன் டாலர் வருமானத்தைப் பெற்றுள்ளது என்று ஏஎஃப்பி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐரோப்பாவின் பல நாடுகளில் அவென்ஞ்சர்ஸ் பாக்ஸ் ஆபிஸ் பதிவுகளை முறியடித்துள்ளது.

உலகமெங்கும் இந்தப் படம் குறித்து நேர்மறையான விமர்சனங்களே பேசப்பட்டு வருகின்றன.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.