This Article is From May 07, 2019

அவென்ஜர்ஸ் எண்ட்கேம்: வசூலில் உலகளவில் இரண்டாம் இடத்தை பெற்றது

இந்தியாவில் 300 கோடிக்கு மேல் வசூலை எட்டியது. இந்திய மொழிப்படங்களின் வசூல் அனைத்தும் முறியடித்து முதலிடத்தில் உள்ளது.

அவென்ஜர்ஸ் எண்ட்கேம்: வசூலில் உலகளவில் இரண்டாம் இடத்தை பெற்றது

அவென்ஜர்ஸ் எண்ட்கேம் படக் காட்சி (courtesy Instagram)

ஹைலைட்ஸ்

  • அவென் ஜர்ஸ் எண்ட்கேம்: வசூலில் சாதனை படைத்து வருகிறது
  • 10 நாளில் ரூ. 312.5 கோடி வசூலை எட்டியது
  • வார இறுதியில் 3 நாளில் ரூ. 50 கோடி இந்தியாவில் வசூலானது
New Delhi:

அவென்ஜர்ஸ்:எண்ட்கேம் திரைப்படம் உலகளவில் அதிக வசூலை குவித்து வரும் திரைப்படமாக இருந்து வருகிறது. வட அமெரிக்காவில் 3 நாள் வார இறுத்யில் 145.8 மில்லியன் டாலர் வசூலை எட்டியது. இந்தியாவெங்கும் உள்ள திரையரங்குகளில் வார இறுதி 3 நாளில் ரூ. 50 கோடியை பெற்றுள்ளது என்று தாரண் ஆதர்ஸ் தெரிவித்துள்ளார். அவென்ஜர்ஸ் தற்போது 312.95 கோடி வசூலை எட்டியுள்ளது.இந்த வசூல் இந்தியாவில் 10 நாட்களுக்கானது மட்டுமே. தாரண் ஆதர்ஸ் அவென் ஜர்ஸ் வசூல் குறித்து போட்ட ட்விட்டினை கீழே பார்க்கலாம்.
 

முதல் வார முடிவில் அவென்ஜர்ஸ் எண்ட்கேம் ரூ. 260 கோடி வசூலையும் இரண்டாவது வார முடிவில் 52 கோடி வசூலையும் தொட்டது. ஆதர்ஸ் எப்போதும் ப்ளாக்பஸ்டர் என்று தலைப்பிட்டிருந்தார். 

இந்தியாவில் 300 கோடிக்கு மேல் வசூலை எட்டியது. இந்திய மொழிப்படங்களின் வசூல் அனைத்தும் முறியடித்து முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் டைட்டானிக் (2.18 பில்லியன் டாலர்) அதிக வசூலை எட்டியது. இரண்டாவது படம் அவதார் (2.79 பில்லியன் டாலர்) வசூலை எட்டியது. அவதாருக்கு அடுத்த நிலையில் அவென்ஜர்ஸ் உள்ளது.


இந்தப் படத்தி ருஷோ பிரதர்ஷ் இயக்கியுள்ளனர். மார்வெல் ரசிகர்கள் பலரும் அவென்ஜர்ஸ் சீரிஸை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

.