Read in English
This Article is From May 03, 2019

அடேங்கப்பா… அவென்ஜரின் ஒரு வார வசூல் இத்தனை கோடியா…!

Avengers: Endgame 2019 ஆம் ஆண்டின் மிக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் அவென்ஜர்ஸ் எண்ட்கேம்.

Advertisement
Entertainment Edited by

அவென்ஜர் எண்ட்கேப் படத்தில் வரும் காட்சி. (Image courtesy: taranadarsh)

Highlights

  • இந்தப்படம் வெள்ளிக்கிழமை வெளியானது
  • இந்தியாவில் அதிகளவு வசூலை எட்டியது இந்த திரைப்படம்
  • வியாழக்கிழமை மட்டும் இந்தப்படம் 16.10 கோடி வசூலை எட்டியது
New Delhi:

உலகமெங்கும் அவென்ஜர்ஸ் எண்ட்கேம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை  வெளியானது. முதல் நாளை வசூலில் பல சாதனைகளை முறியடித்த இந்தத் திரைப்படம். இந்தியாவில் ஒரு வாரத்தில் இந்த திரைப்படம் 260 கோடி வசூலை எட்டியுள்ளது என்று பாலிவுட் வர்த்தக ஆய்வாளர் தாரன் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார். அவென்ஜர்ஸ் வார நாட்களும் 16.10 கோடி வசூலை எட்டியுள்ளது. தாரன் ஆதர்ஷ் தன்னுடைய ட்விட் பதிவில் ஹிந்து பதிப்பில் வெள்ளிக்கிழமை ரூ. 53.60 கோடியும், சனிக்கிழமை ரூ. 52.20 கோடியும், திங்கள் ரூ.31.05 கோடியும்,செவ்வாய் ரூ.26.10 கோடியும், புதன்கிழமை ரூ. 28.50 கோடியும், வியாழன் ரூ.16.10 கோடியும் மொத்தமாக ரூ.260.40 கோடி வசூலை எட்டியுள்ளது. இந்தியா முழுமைக்கும் மொத்தமாக ரூ. 310 கோடி வசூலை எட்டியது. 

மற்றொரு தனி ட்விட்டில் மார்வெல் படத்தில் ஒரு வார அறிக்கையை பகிர்ந்து கொண்டார். அவரது ட்விட்டில் இரண்டாவது வாரத்தில் 350 முதல் 400 கோடிவரை வசூலை எட்டும் எனத் தெரிவித்துள்ளார்.  

தாரன் ஆதர்ஷ்  போட்ட ட்விட் பதிவு இதோ: 

Advertisement

இந்தியாவில் மிக அதிகளவு வசூலை செய்த படமாக அவென்ஜர்ஸ் உள்ளது. பாகுபலி 2, சல்மான் கான் நடித்த சுல்தான் மற்றும் டைகர் ஸிண்டா ஹாய், அமீர் கானின் டங்கல் மற்றும் சஞ்சூ ஆகிய படங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி வசூலில் முன்னிலையில் உள்ளது.  

Advertisement

சூப்பர் ஹீரோக்களின் பட வரிசையில் கடைசி படமான அவென்ஜர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் 2019 ஆண்டில் மிக ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று என்பதால் இந்த வசூலை குவித்ததில் எந்தவொரு ஆச்சர்யமும் இல்லை. இந்தியாவில் மட்டும் படத்தின் முதல் நாள் வசூல் 50 கோடிக்கு அதிகமான வசூலை எட்டியது

Advertisement