இன்று உத்தர பிரதேச முதல்வர் அயோத்திக்கு வருகை புரிந்திருந்தார்.
Ayodhya: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் புதியதாக ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் அடுத்த மாதம் 5-ம் தேதியன்று இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. தற்போது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியிலிருந்து ராமஜெனம பூமி என்று அழைக்கப்படும் இடங்களுக்கு சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ள தொடங்கியுள்ளார்.
ஆகஸ்ட் 5 நடைபெற உள்ள அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக அயோத்தியில் ஆதித்யநாத் ராம ஜனமபூமி தளத்தில் ராமருக்கு பிரார்த்தனை செய்தார்.
இன்று பிற்பகுதியில், விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து யோகி ஆதித்யநாத் அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம ஜென்ம பூமியில் பூமி பூஜை நடைபெறும். இதில் 150 முதல் 200 பேர் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளுடன் பங்கேற்பார்கள்.
1988 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட அசல் வடிவமைப்போடு ஒப்பிடும்போது, கோயிலின் உயரம் குறைந்தது 20 அடி உயர்த்தப்பட்டு 161 அடி உயரமாக கட்டியெழுப்ப கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிறகு கோவிலை முழுமையாக கட்டி முடிக்க குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறும் விழாவுக்கு முன்னதாக மூன்று நாள் நீளமான வேத சடங்குகள் நடைபெறும். பின்னர் பிரதமர் 40 கிலோ வெள்ளி செங்கலை அடிக்கல் நாட்டுவார்.
சடங்குகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அயோத்தி முழுவதும் ராட்சத சி.சி.டி.வி திரைகள் வைக்கப்படும், எனவே பக்தர்கள் நிகழ்ச்சியைக் காணலாம் என்று கோயிலுடன் பணிபுரிந்த ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா கூறியுள்ளார்.