বাংলায় পড়ুন Read in English
This Article is From Oct 16, 2019

அயோத்தி வழக்கு இறுதி விசாரணை: வழக்கறிஞர் வரைப்படத்தை கிழித்ததால் பரபரப்பு!

ராஜீவ் தவான், ராம் ஜென்மபூமியை குறிப்பிடும் வரைபடத்தை கிழித்து ஏறிந்தார். தொடர்ந்து, அதனை கிழிப்பதற்கு தங்களது அனுமதி கிடைக்குமா என்றும் நீதிபதிகளிடம் அனுமதியும் கோரியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

அயோத்தி வழக்கு தொடர்பான இறுதி விசாரணை 40வது நாளாக இன்று நடைபெற்று வரும் நிலையில், மூத்த வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்திற்குள் வரைபடத்தை கிழித்து எரிந்தது நீதிபதிகளை கோபப்படுத்தியது. 

இஸ்லாமியர்கள் வாக்பு வாரியம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், ராம் ஜென்மபூமியை குறிப்பிடும் வரைபடத்தை கிழித்து ஏறிந்தார். தொடர்ந்து, அதனை கிழிப்பதற்கு தங்களது அனுமதி கிடைக்குமா என்றும் நீதிபதிகளிடம் அனுமதியும் கோரியுள்ளார். 

அகில இந்திய இந்து மகாசபாவின் வழக்கறிஞரான விகாஸ் சிங், உத்தரபிரதேசத்தில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமையைக் கோரி தனது வாதங்களின் போது குணால் கிஷோரின் பிரசுரத்தை ஆதாரமாக வைக்க முயன்றதை அடுத்து ராஜீவ் தவான் இவ்வாறு செயல்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம் இந்த புத்தகத்தை நம்பக் கூடாது என்றும் அதனை கிழிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தவான் அனுமதி கோரியுள்ளார். இதைத்தொடர்ந்து, உங்களால் இன்னும் அதனை கிழிக்க முடியும், நீங்கள் விரும்பியதை செய்யுங்கள் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கோபமாக பதிலளித்துள்ளார்.

Advertisement

மேலும், கண்ணியம் கெட்டுப்போனது, நல்லொழுக்கம் கடைபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து, விசாரணை இப்படி தான் செல்லும் என்றால், நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார் தலைமை நீதிபதி. இதனால், நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் இன்று மாலை 5 மணிக்குள் அனைத்து வாதங்களையும் முடிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெறுவதால் அதற்கு முன்பாக உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Advertisement