हिंदी में पढ़ें Read in English
This Article is From Nov 09, 2019

Ayodhya Case: ஒருமித்த தீர்ப்பை வழங்கிய 5 நீதிபதிகள் இவர்கள்தான்…!

Ayodhya Verdict: வழக்கின் தீர்ப்பு மிகவும் சர்ச்சைக்குரியது என்பதால் பாதுகாப்பை அரசாங்கம் அதிகரித்துள்ளது. தீர்ப்பை வழங்கும் ஐந்து நீதிபதிகள் யார் என்பதை பார்க்கலாம்:

Advertisement
இந்தியா Edited by

Ayodhya Verdict: ரஞ்சன் கோகய் வடகிழக்கிலிருந்து நீதித்துறையில் தலைமைக்கு வந்த முதல் நபர்.

Highlights

  • அயோத்தி வழக்கின் தீர்ப்பு மிகவும் சர்ச்சைக்குரியது
  • 5 பேர் கொண்ட நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வெளியிடுகிறது
  • இந்த தீர்ப்பு காலை 10.30க்கு வாசிக்கப்பட்டது
New Delhi:

இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு பாபர் மசூதி இடிப்பு - அயோத்தி ராமர் கோயில் வழக்கில் தீர்ப்பை வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பு காலை 10.30க்கு வெளியாகவுள்ளது. 1992ல் வலதுசாரிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட சர்ச்சைக்கு ஒருவகையில் தீர்வு கொண்டு வரப்படும் என்று நம்புகிறது. வழக்கின் தீர்ப்பு மிகவும் சர்ச்சைக்குரியது என்பதால் பாதுகாப்பை அரசாங்கம் அதிகரித்துள்ளது. தீர்ப்பை வழங்கும் ஐந்து நீதிபதிகள் யார் என்பதை பார்க்கலாம்:

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்:

அசாமைச் சேர்ந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வடகிழக்கில் இருந்து நாட்டின் உயர் நீதித்துறை பதவிக்கு 2018 அக்டோபரில் நியமிக்கப்பட்ட முதல் நபர். 1978ல் பதிவு செய்துகொண்டவர். ஹவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்று நிரந்தர  நீதிபதி ஆனவர். பிப்ரவரி 28, 2001அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். 2012இல் உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்படுவதற்கு முன்னர் அதன் தலைமை நீதிபதியாக ஆனார். நீதிபதியாக தன்  வாழ்க்கையில் பல முக்கிய வழக்குகளை விசாரித்தவர். தேசிய குடிமக்கள் பதிவேடு, அயோத்தி வழக்கு தீர்ப்பு என்று பல வழக்குகளை விசாரித்துள்ளார். நேற்று உத்தர பிரதேச உயர் அதிகாரிகளை சந்தித்து, முக்கிய அடையாளங்களுக்கு முன்னால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதித்தார். 

2012இல் உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்படுவதற்கு முன்னர் அதன் தலைமை நீதிபதியாக ஆனார். 

நீதிபதி எஸ்.ஏ. போப்டே

நீதிபதி சரத் அரவிந்த் போப்டே ரஞ்சன் கோகய் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். அதற்கு முன்பு மும்பை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக  2000ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டவர். மகாராஷ்டிராவில் பிறந்தவர். 2013 ஏப்ரலில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டவர். அவரது பதவிக்காலம்  முடிவடைவதற்கு முன் 18 மாதங்களுக்கு தலைமை நீதிபதியாக இருப்பார். ரஞ்சன் கோகய்  ஓய்வு பெற்றபின் இவரே தலைமை நீதிபதியாக செயல்படுவார். 

மகாராஷ்டிராவில் பிறந்தவர் எஸ்.ஏ. போப்டே.

நீதிபதி டி.ஒய். சந்திரசூட்

இந்தியாவின் நீண்ட காலம் தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி. சந்திரசூட்டின் மகன் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உச்சநீதிமன்ற நீதிபதியாக  2016மே மாதம்  அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் நியமிக்கப்பட்டவர். இதற்கு முன்பு பம்பாய்  உயர் நீதிமன்றத்திலும் அலகாபாத் உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றினார். ஹர்வர்ட் சட்டக்கல்லூரியில் பட்டதாரியானவர். தனிமனித உரிமைக்கான சில தீர்ப்புகள், வயது வந்தோர்கான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். 

பம்பாய்  உயர் நீதிமன்றத்திலும் அலகாபாத் உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றினார். 

Advertisement

நீதிபதி அசோக் பூஷண்

1979 ஆம் ஆண்டில் தனது வழக்கறிஞர் வாழ்க்கையை அசோக் பூஷண் தொடங்கினார். ஏப்ரல் 2001 இல் நீதிபதியாக உயர்த்தப்படுவதற்கு முன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.  ஜூலை  2014இல் கேரளா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். மார்ச் 2015இல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி பூஷண் மே 13, 2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார். 

நீதிபதி பூஷண் மே 13, 2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார். 

நீதிபதி அப்துல் நசீர்

நீதிபதி அப்துல் நசீர் பிப்ரவரி 1983இல் வழக்கறிஞராக சேர்ந்தார் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் பயிற்சி பெற்றார். 2003இல் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். பிப்ரவரி 17, 2017 அன்று உச்ச நீதிமன்றத்திற்கு  உயர்த்தப்பட்டவர். முத்தலாக் நடைமுறையை நீதிபதி ஜே.எஸ்.கெஹருடன் இணைந்து “இறையியலின் பாவம்” என்று தீர்ப்பளித்தவர்.    

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் பயிற்சி பெற்றார்

Advertisement