This Article is From Mar 08, 2019

அயோத்தி வழக்கு: கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழு! - உச்சநீதிமன்றம்

அயோத்தி விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர்களை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தி வழக்கை மத்தியஸ்த்துக்கு பரிந்துரைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

New Delhi:

அயோத்தி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக சமரச பேச்சுவார்த்தைக்காக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடைமுறைகள் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் ரகசியமாக நடைபெறும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சமரச குழுவில் வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உள்ளனர். 

அயோத்தி சமரச பேச்சுவார்த்தை விவரங்களை ஊடகங்கள் வெளியிட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்தியஸ்தர் குழு ஒரு வாரத்தில் பேச்சுவார்த்தையை 4 வாரங்களில் தொடங்கி 8 வாரங்களில் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது அயோத்தி. இங்குள்ள ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தனது தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி, 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய அமைப்புகள் பகிர்ந்து கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது.

up2jhiio

இதை எதிர்த்து, 14 மேல் முறையீடு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. மார்ச் 5ம் தேதியுடன் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம், ‘ராம ஜென்மபூமி – பாபர் மசூதி விவகாரம் என்பது நிலத்தைப் பொறுத்தது அல்ல நம்பிக்கையைப் பொறுத்தது' என்று கருத்து தெரிவித்தது.

.