This Article is From Aug 04, 2020

ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியில் 1.25 லட்சம் லட்டுகள் விநியோகிக்க ஏற்பாடு!

ரகுபதி லட்டு, என்ற பெயரில் 1,25,000 லட்டுகள் அயோத்தி ராமர் கோயில் பூஜை தினத்தில் விநியோகிக்கப்படும்.

ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியில் 1.25 லட்சம் லட்டுகள் விநியோகிக்க ஏற்பாடு!

ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியில் 1.25 லட்சம் லட்டுகள் விநியாகிக்க ஏற்பாடு!

Ayodhya (Uttar Pradesh):

அயோத்தியில் நாளை நடைபெற உள்ள ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியை முன்னிட்டு, பாட்னாவை சேர்ந்த மகாவீர் மந்திர் அறக்கட்டளை 1.25 லட்சம் ரகுபதி லட்டுகளை விநியோகிக்க உள்ளது. 

1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுகளில் 51,000 லட்டுகள் ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில் ஒப்படைக்கப்படுகிறது.

மகாவீர் மந்திர் அறக்கட்டளையை சேர்ந்த ஆச்சார்யா கிஷோர் கூறும்போது, ரகுபதி லட்டு, என்ற பெயரில் 1,25,000 லட்டுகள் அயோத்தி ராமர் கோவில் பூஜை தினத்தில் விநியோகிக்கப்படும். இதில், 51,000 லட்டுகள் ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில் ஒப்படைக்கப்படும். 

மீதமுள்ள லட்டுகள் பீகாரில் உள்ள சீதாமாரியில் உள்ள ஜானகியின் பிறந்த இடத்திலும், அதனை சுற்றியுள்ள சுமார் 25 புனித யாத்திரை இடங்களிலும் உள்ள கோயில்களுக்கு அனுப்பப்படும், அங்கு ராமரின் கால்தடம் பதித்திருப்பதாக நம்பப்படுகிறது.

ஆகஸ்ட் 5ம் தேதி பீகாரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராம் மற்றும் ஹனுமான் பக்தர்களுக்கு இந்த லட்டுகள் விநியோகிக்கப்படும். இந்த லட்டுக்கள் தூய்மையான மாட்டின் நெய் கொண்டு தயாரிக்கப்படுகின்றன, ”என்று ஆச்சார்யா கிஷோர் குணால் தெரிவித்துள்ளார்.

பாட்னாவின் மகாவீர் மந்திர் அறக்கட்டளை ஏற்கனவே ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்துள்ளதாகவும், தொடர்ந்து, ராமர் கோவில் கட்டுமானத்திற்காக மொத்தம் ரூ.10 கோடி கொடுக்கும் என்றும் அவர் கூறினார். "நாங்கள் அயோத்தியில் ராம் பக்தர்களுக்கு இலவசமாக" ராம் ரசோய் "ஐ இயக்குகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

ஆச்சார்யா கிஷோர் குணால் அயோத்தி பூமி பூஜையில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. \இருக்கிறார், அதில் பிரதமர் நரேந்திர மோடி ராம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

உச்ச நீதிமன்றம் கடந்த நவ.9ம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கு இடத்தை ஒப்படைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 

.