Read in English
This Article is From Aug 05, 2020

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை: அயோத்திக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி!

தொடர்ந்து, விழாவின் மையமாக ராம்ஜென்ம பூமியில் 40 கிலோ வெள்ளி செங்கலை வைத்து ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கால் நாட்டுகிறார்.

Advertisement
இந்தியா

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை: டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!

New Delhi:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவாத் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விஐபிக்கள் கலந்துகொள்கின்றனர். 

ராமர் கோவில் பூமி பூஜை விழாவிற்காக பிரதமர் மோடி இன்று 29 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தி வருகை தருகிறார். இதனால், ராம் ஜென்ம பூமியை பார்வையிடும் முதல் பிரதமர் மோடி என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, விழாவின் மையமாக ராம்ஜென்ம பூமியில் 40 கிலோ வெள்ளி செங்கலை வைத்து ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கால் நாட்டுகிறார். ராமர் கோயிலின் வடிவமைப்பு நேற்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. அதில், கோபுரங்கள், தூண்கள் மற்றும் குவிமாடங்களுடன் கூடிய மூன்று மாடி அமைப்பு கொண்டதாக கோயில் உள்ளது. கோயிலின் மொத்த உயரம் 161 அடியாக இருக்கும், இது முதலில் திட்டமிடப்பட்டதை விட இரு மடங்கு பெரிதாக இருக்கும் என அதன் கட்டிடக் கலைஞர் தெரிவித்துள்ளார்.

இதற்காக கோவில் நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஊதா மற்றும் பச்சை நிறத்தில் ஒளிருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு விழாவில் பங்கேற்க ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், பங்கேற்க இருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல், விழாவில் பங்கேற்க இருந்த மதகுரு ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

கொரோன    வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் காணொளி காட்சி மூலம் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த சட்டப்போராட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம்  அனுமதி அளித்தது. 

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நேரடி தகவல்கள்: 

Aug 05, 2020 12:56 (IST)


ராமர் கோவில் பூமி பூஜையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் பிரதமர் மோடி.
Aug 05, 2020 12:24 (IST)
ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி
Aug 05, 2020 12:23 (IST)
Aug 05, 2020 12:11 (IST)


அனுமன்ஹார்கியில் பிரதமர் நரேந்திர மோடி 
Aug 05, 2020 12:10 (IST)


ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு, பெங்களூரில் இனிப்புகள் வழங்கி கொண்டாடும் மக்கள்
Advertisement
Aug 05, 2020 12:08 (IST)


அனுமன்ஹார்கி  கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்
Aug 05, 2020 10:42 (IST)

ராமர் கோவில் பூமி பூஜைக்கு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் விழாவில் கலந்துகொண்டனர். 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
Aug 05, 2020 10:39 (IST)
ராமர் கோவில் அடிக்கால் நாட்டு விழா குறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 



Advertisement