Ram Mandir Bhoomi Pujan: பிரதமர் மோடியே ராம ஜென்ம பூமிக்கு வருகை தரும் முதல் பிரதமர் ஆவார்: உ.பி அரசு
New Delhi: பிரதமர் நரேந்திர மோடியே ராம ஜென்ம பூமிக்கு வருகை தரும் முதல் பிரதமர் ஆவார் என உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
29 வருடங்களுக்கு பின்பு பிரதமர் நரேந்திர மோடி ராம்ஜென்ம பூமிக்கு வருகை தந்துள்ளார். கடந்த 1992ல் ராமர் கோவில் கட்டிய பின்பே அயோத்திக்கு வருகை தருவேன் என பிரதமர் மோடி சபதம் ஏற்றிருந்தார்.
பிரதமர் மோடி திருங்க யாத்திரையின் கன்வீனராக இருந்தபோது கடைசியாக அயோத்திக்கு வருகை தந்தார். அப்போது, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை அகற்றுவேன் என முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பிரச்சாரம் மேற்கொண்டார்.
தற்போது, ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து ஜம்மு - காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்துள்ளார்.
கடந்த வருடம் ஃபைசாபாத் - அம்பேத்கார் நகர் எல்லையில் பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். எனினும், அவர் அயோத்திக்கு செல்லவில்லை.
இதுதொடர்பாக உத்தர பிரதேச அரசு கூறும்போது, பிரதமர் நரேந்திர மோடியே ராமரின் பிறப்பிடம் என்று நம்பப்படும், ராம ஜென்ம பூமிக்கு வருகை தரும் முதல் பிரதமர் ஆவார். அதேபோல், அனுமன்கார்கிக்கு வருகை தந்து அனுமனை வழிபட்ட முதல் பிரதமரும் அவர்தான் என்று தெரிவித்துள்ளது.
ராமர் கோவில் என்பது பாஜகவின் சித்தாந்தமாகவும், தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றாகவும் இருந்தது.
இந்த ராமர் கோவில் பூமி பூஜை பிரதமர் மோடிக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதிக்கு மாற்றாக, ராமர் கோவிலை கட்ட வேண்டும் என 1990களில் நாடு முழுக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் ஆவார்.
1992ல் கரசேவகர்கள் பாபர் மசூதியை கரசேவர்கள் இடித்தது நாடு முழுவதும் பெரும் கலவரத்திற்கு வழிவகுத்தது.
ராமர் கோவில் பிரச்சாரம் மூலம் 1990களில் பாஜக ஒரு தேசிய சக்தியாக உருவெடுத்தது. தொடர்ந்து, இந்திய அரசியலையும் மாற்றியமைத்து. எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கு வகித்ததாக குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர்.