This Article is From Aug 04, 2020

ராமர் கோவில் பூமி பூஜை: அயோத்தியில் நாளை பிரதமர் மோடி 3 மணி நேரம் செலவிடுகிறார்!

Ram Mandir Bhumi Pujan: உத்தர பிரதேசத்தை பிரதமர் மோடி சென்றடைந்ததும், முதலில் அங்கு அனுமன் காதி கோயிலுக்கு செல்ல உள்ளார். 

ராமர் கோவில் பூமி பூஜை: அயோத்தியில் நாளை பிரதமர் மோடி 3 மணி நேரம் செலவிடுகிறார்!

Ayodhya Ram Temple: ராமர் கோவில் பூமி பூஜை: அயோத்தியில் நாளை பிரதமர் மோடி 3 மணி நேரம் செலவிடுகிறார்!

Ayodhya:

ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள நாளை அயோத்தி செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சுமார் 3 மணி நேரம் வரை செலவிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த பெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 4 பேர் மட்டும் மேடையில் அமர உள்ளனர். 

உத்தர பிரதேசத்தை பிரதமர் மோடி சென்றடைந்ததும், முதலில் அங்கு அனுமன் காதி கோயிலுக்கு செல்ல உள்ளார். 

இதுதொடர்பாக ராமர் கோவில் டிரஸ்ட் அதிகாரிகள் கூறும்போது, ராமர் பிறந்த இடம் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்களால் நம்பப்படும் கோயில் விழாவிற்கு பிரதமர் மோடி செல்வதற்கு முன்பு, அவர் ராம் லாலா, குழந்தை ராமரை வழிபடுகிறார். 

ஆளும் பாஜகவின் சித்தாந்தம் மற்றும் வாக்கெடுப்பு வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றான ராமர் கோயில் கட்டுமானத்தின் தொடங்கி வைக்கும் வகையில் பிரதமர் மோடி, 40 கிலோ வெள்ளி செங்கல் வைத்து அடிக்கல் நாட்ட உள்ளார். 

இந்த நிகழ்ச்சிக்கான மதச்சடங்குகள் நேற்றைய தினமே தொடங்கின. இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் கிட்டதட்ட 175 பேர் அனுமதிக்கப்பட உள்ளனர். 

இந்த விழாவுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 175 பேரில், 135 பேர் மதகுருக்கள் மற்றும் மதத் தலைவர்கள் ஆவார்கள். 

பல தசாப்தங்களாக பழமையான கோயில்-மசூதி தகராறு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த, இக்பால் அன்சாரிக்கு, முதல் அழைப்பு விடுக்கப்பட்டது. "நான் நிச்சயமாக அதில் கலந்துகொள்வேன். நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் இப்போது சர்ச்சை முடிந்துவிட்டது" என்று அன்சாரி தெரிவித்துள்ளார். 

இந்த வழக்கில் மிகப் பழமையான வழக்குரைஞரான அவரது தந்தை ஹாஷிம் அன்சாரி 2016ல் உயிரிழந்தார்.
இந்த விழாவை தேசிய தொலைக்காட்சியான தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்ப உள்ளது.

.