Read in English
This Article is From Aug 05, 2020

ராமர் கோயிலில் பாரிஜாதம் மரக்கன்று நட்ட பிரதமர் மோடி!

ராமர் கோயிலுக்கு அடிக்கால் நாட்டுவதற்கு முன்னதாக கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி பாரிஜாதம் மரக்கன்றை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றியுள்ளார்.

Advertisement
இந்தியா Posted by

அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு மரக்கன்றையும் நட்டுள்ளார். 

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு முன்னதாக கோவில் வளாகத்தில் பிரதமர் மோடி பாரிஜாதம் மரக்கன்றை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றியுள்ளார். 

அயோத்தியின் ராமஜென்ம பூமியில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என பல தசாப்தங்களாக பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதற்கான பிரம்மாண்ட பூமி பூஜை விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய விஐபிக்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

இந்த நிகழ்ச்சியின் போது, கோவில் வளாகத்தில் மரக்கன்றை நட்டு தண்ணீர் ஊற்றினார். தொடர்ந்து, விழாவின் மையமாக ராம ஜென்ம பூமியில் 40 கிலோ வெள்ளி செங்கல்லை வைத்து ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, ஸ்ரீ ராமர், சீதா தேவியை நினைவு கூறுவோம் என்று ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டார்.


லக்னோவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்த பிரதமர் மோடி, தங்க பட்டு குர்தா அணிந்திருந்தார். பூமி பூஜைக்கு செல்வதற்கு முன்பு, முதலில் அனுமன்ஹார்கி சென்ற அவர் அனுமனை வழிபட்டார். தொடர்ந்து, ராமரின் பிறப்பிடமான ராம்லல்லா சென்று தரிசனம் மேற்கொண்டார். 

Advertisement

அனுமன்ஹார்கியில் பிரதமர் மோடிக்கு தலைமை குருக்கள் தலைக்கவசம் பரிசளித்தார். தொடர்ந்து, குருக்கள் பூசாரி ராஜூ தாஸ் கூறும்போது, புராணத்தின் படி, இறைவன் அனுமனின் ஆசீர்வாதம் இல்லாமல் எந்த வேலையும் முடிவதில்லை என்று கூறினார்.

இந்த விழாவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜகவின் கருத்தியல் வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உள்ளிட்ட 170 ஆன்மீகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

Advertisement

கொரோன    வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் காணொளி காட்சி மூலம் பங்கேற்றார்கள். 

Advertisement