বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 03, 2020

ராமர் கோயில் விழா; பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர் மூவருக்கு அழைப்பு!

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் மோடி 40 கிலோ வெள்ளி பிரதமர் செங்கல்லை நிறுவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா
  • ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம்(RSS) தலைவர் மோகன் பகவத் போன்றோருக்கு அழைப்பு
  • முதல் அழைப்பு இக்பால் அன்சாரிக்கு சென்றதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தகவல்
New Delhi:

மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் கர்நாடக முதல்வர் என நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட 18 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், தற்போது அயோத்தியில் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க இருக்கும் சிறப்பு அழைப்பாளர்களின் பட்டியல் சுருக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிரதமர் மோடி, ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மகாந்த் நிருத்யா கோபால்தாஸ் ஆகியோர் ஐந்து பேர் மேடையில் இருப்பார்கள்.

இந்த பெயர்களோடு குழந்தை ராமர் படமும் அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளது.

முதல் அழைப்பு அயோத்தி வழக்கில் முஸ்லீம் வழக்குரைஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு சென்றதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. "இது ராமரின் விருப்பம்" என்று அவர் கூறியுள்ளார். மேலும் இதுவரை 150 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் மோடி 40 கிலோ வெள்ளி செங்கல்லை பிரதமர் நிறுவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இந்த விழாவிற்கு, ராமர் கோயில் பிரச்சாரத்தில் முக்கிய முகங்களாக இருந்த அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement