Read in English
This Article is From Aug 05, 2020

ராமர் கோயில் விழா; “இந்த கோயில் நமது பாரம்பரியத்தின் அடையாளம்” என பிரதமர் மோடி பெருமிதம்!

“இந்த கோயில் நம் பாரம்பரியத்தின் அடையாளமாக மாறும், நம்முடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக மாறும். இது கோடிக்கணக்கான மக்களின் அடையாளமாகவும் மாறும்.” என பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • இந்த நிகழ்வுக்கு அழைத்திருப்பது எனது அதிர்ஷ்டம்
  • வரலாறு தன்னை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதை குறிக்கின்றது
  • உலகெங்கிலும் உள்ள மக்கள் ராமர், சீதையின் தரிசனத்திற்காக இங்கு வருவார்கள்
Ayodhya/ New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தற்போது நடைபெற்று வருகின்றது. ராமர் கோயில் கட்டுமானத்தின் அடையாளமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் அயோத்தியில் 40 கிலோ வெள்ளி செங்கல்லைப் பதித்தார்.

  • பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, “ராம ஜன்மபூமி அறக்கட்டளை என்னை இந்த நிகழ்வுக்கு அழைத்திருப்பது எனது அதிர்ஷ்டம். இந்த வரலாற்று தருணத்திற்கு சாட்சியாக எனக்கு ஒரு வாய்ப்பை அறக்கட்டளை  வழங்கியது.” என்று கூறியுள்ளார்.
  • “ராமர் கோயில் கட்டுமானம் ஒரு வரலாற்று தருணத்தை மட்டும் குறிக்கவில்லை. வரலாறு தன்னை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதை குறிக்கின்றது.”
  • “நீதியை நேசிக்கும் நாடான இந்தியாவுக்கு உண்மை, அகிம்சை, நம்பிக்கை மற்றும் தியாகம் ஆகியவற்றின் தனித்துவமான பரிசுதான் இந்நாள். கோடிக்கணக்கான பக்தர்களின் தீர்மானத்திற்கு ஒரு சான்றாக இந்நாள் உள்ளது.”
  • “கோயில் கட்டுமானம் அயோத்திக்கு அழகை மட்டும் சேர்க்காது, இது அப்பகுதியின் முகத்தையும் மாற்றிவிடும், மேலும் வாய்ப்புகள் உருவாக்கப்படும். உலகெங்கிலும் உள்ள மக்கள் ராமர் மற்றும் சீதையின் தரிசனத்திற்காக இங்கு வருவார்கள்.”
  • “இந்த கோயில் நம் பாரம்பரியத்தின் அடையாளமாக மாறும், நம்முடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக மாறும். இது கோடிக்கணக்கான மக்களின் அடையாளமாகவும் மாறும்.” என பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார்.
Advertisement