This Article is From Aug 01, 2020

ராமர் கோயில் விழா: அத்வானி மற்றும் ஜோஷியை விட்டுவிட்டு உமா பாரதிக்கு மட்டும் அழைப்பு விடுப்பு!

உமா பாரதிக்கு மட்டுமே ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ராமர் கோயில் விழா: அத்வானி மற்றும் ஜோஷியை விட்டுவிட்டு உமா பாரதிக்கு மட்டும் அழைப்பு விடுப்பு!

பாஜகவின் மூத்த தலைவரான எல்கே அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஹைலைட்ஸ்

  • ஆகஸ்ட் 5 ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா
  • அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை
  • சர்ச்சைக்குரிய இந்த வழக்கில் தீர்ப்பு தனக்கு ஒரு பொருட்டல்ல உமா கருத்து
New Delhi:

இம்மாதம் 5-ம் தேதியன்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பாஜகவின் மூத்த தலைவர்கள் பெரும்பாலானோர் பங்கேற்க உள்ள நிலையில் எல்.கே அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு இவ்விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லையென தெரியவருகிறது.

1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் அத்வானி, ஜோஷி, உமா பாரதி ஆகியோர் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர். இதில் உமா பாரதிக்கு மட்டுமே ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.  

17btasmk

அடுத்த வாரம் ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் லக்னோவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வீடியோ இணைப்பு மூலம் ஆஜரான 92 வயதான அத்வானி, மசூதி இடிப்பது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. நான்கரை மணி நேரத்திற்குள் 1000 க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதே போல முரளி மனோகர் ஜோஷியும் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவர் கூறியுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து உமா பாரதியும், மிகவும் சர்ச்சைக்குரிய இந்த வழக்கில் தீர்ப்பு தனக்கு ஒரு பொருட்டல்ல என்று அறிவித்திருந்தார்.

பாஜகவின் தொடர்புடைய நெருங்கிய கட்சியான சிவசேனாவன் முதல்வரான உத்தவ் தாக்ரேவுக்கும் இந்த விழாவுக்கான அழைப்பு இன்னும் விடுக்கப்படவில்லை.

மேலும், கொரோனா நெருக்கடி காரணமாக விருந்தினர்கள் பட்டியல் 50 என்கிற எண்ணிக்கையாக சுருக்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் விழாவிற்கு பெரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, இது 40 கிலோ வெள்ளி செங்கல் அடித்தளக் கல்லாக வைக்கப்படும். இதை பிரதமர் தொடங்கி வைப்பார்.

With input from PTI

.